உங்கள் ஸ்மார்ட்ஃபோனைச் சார்ஜ் செய்ய அடிக்கடி மறக்கிறீர்களா? அப்படியென்றால் வருத்தப்பட வேண்டாம்! பிஸியான வேலை நேரங்கள், ஆயிரக்கணக்கான சிந்தனைகள் என ஸ்மார்ட்ஃபோனைச் சார்ஜ் செய்வது முதலான குட்டி குட்டி விஷயங்களையும் நாம் மறப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கின்றன. மேலும், காலையிலேயே பணிக்குச் செல்வது, நண்பர்களைச் சந்திப்பது எனப் பல்வேறு வேலைகள் இருக்கும் சூழலில், உங்கள் ஸ்மார்ட்ஃபோன் அதன் சார்ஜ் முழுவதுமாக தீரும் அளவுக்குப் பயன்படும் என்பதும் உங்களுக்கு நன்றாகத் தெரிந்திருக்கும். அப்படியான சூழலில், நீங்கள் உங்கள் ஸ்மார்ட்ஃபோனைச் சார்ஜ் செய்ய மறந்தால், பதட்டம் அதிகரிப்பதோடு, மன அழுத்தம் கூட ஏற்படலாம்.
இப்படியான நெருக்கடியான சூழல்களில் வாழும் அனைவருமே தங்கள் ஸ்மார்ட்ஃபோன்களை விரைவாக சார்ஜ் செய்ய விரும்புவதால், அவற்றிற்கான டாப் 7 டிப்ஸ்களை இங்கே கொடுத்துள்ளோம்.. இந்த டிப்ஸ்களை செயல்படுத்த உங்களுக்கு ஃபாஸ்ட் சார்ஜர் கூட தேவையில்லை என்பது முக்கியமானது.
1. உங்கள் ஃபோனை ஏர் பிளேன் மோடில் போடவும்
உங்கள் ஃபோன் எப்போது நெட்வொர்க்குடன் தொடர்பில் இருப்பதும் உங்கள் பேட்டரி விரைவில் முடிவதற்குக் காரணமாக அமையும். உங்கள் ஃபோனை ஏர் பிளேன் மோடில் போடுவது உங்கள் பேட்டரியைச் சேமிக்க உதவும். நெட்வோர்க்கோடு இணைய முடியாவிட்டாலும், உங்களுக்குத் தேவையான செயலிகளைப் பயன்படுத்தலாம்.
2. பவர் சேவிங் மோடைப் பயன்படுத்தவும்
பவர் சேவிங் மோடை உங்கள் ஸ்மார்ட்ஃபோனில் பயன்படுத்துவது அதன் பின்னணியில் இயங்கும் செயலிகளைத் தடுப்பதோடு, உங்கள் ஸ்மார்ட்ஃபோனின் ஆற்றலை மிச்சப்படுத்துவதோடு, அது சார்ஜ் செய்யப்படும் வேகத்தையும் அதிகரிக்கிறது.
3. ஸ்மார்ட்ஃபோனைப் பவர் ஆஃப் செய்யவும்
உங்கள் ஸ்மார்ட்ஃபோனை விரைவில் சார்ஜ் செய்வதற்கு அது சார்ஜிங் மீது மட்டுமே கவனம் செலுத்துவது பயனுள்ளதாக அமையும். அவ்வாறு சார்ஜ் மீது மட்டுமே உங்கள் ஸ்மார்ட்ஃபோன் கவனம் செலுத்த அதனைப் பவர் ஆஃப் செய்ய வேண்டும்.
4. சுவரில் உள்ள ப்ளக்கில் ஸ்மார்ட்ஃபோனைச் சார்ஜ் செய்யவும்
உங்கள் ஃபோனைக் கணினியிலோ, லேப்டாப்பிலோ சார்ஜ் செய்வதற்குப் பதிலாக அதனைச் சுவரில் உள்ள ப்ளக்கில் சார்ஜ் செய்வது விஉரைவாக சார்ஜ் செய்ய உதவும். கணினி, லேப்டாப் ஆகியவற்றில் உள்ள USB போர்ட்டை விட அதிகளவிலான மின் ஆற்றல் சுவரில் உள்ள ப்ளக்கில் கிடைப்பதால், ஃபோன் விரைவில் சார்ஜ் செய்யப்படுகிறது.
5. சார்ஜ் செய்யும் போது ஸ்மார்ட்ஃபோனைப் பயன்படுத்தக் கூடாது
உங்கள் ஸ்மார்ட்ஃபோன் சார்ஜ் செய்யப்பட்டுக் கொண்டிருக்கும் போது, நீங்கள் அதனைப் பயன்படுத்தினால், அது தனக்குக் கிடைக்கும் ஆற்றலை உங்கள் பயன்பாட்டுக்குச் செலவிடும். இது சார்ஜிங் வேகத்தைக் குறைப்பதால், ஸ்மார்ட்ஃபோன் சார்ஜ் செய்யப்படும் போது, அதனைப் பயன்படுத்தக் கூடாது.
6. ஃபாஸ்ட் சார்ஜிங் கேபிள்களைப் பயன்படுத்தவும்
சார்ஜ் செய்யும் கேபிளின் தரமும் சார்ஜிங்கில் முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே உங்களால் முடிந்தால் ஃபாஸ்ட் சார்ஜிங் கேபிள்களை விலை கொடுத்து வாங்கலாம். மேலும், பவர் பேங்க் பயன்படுத்துவது நீங்கள் செல்லும் இடங்களில் எல்லாம் உங்கள் ஸ்மார்ட்ஃபோனை சார்ஜ் செய்ய உதவும்.
7. சூடான இடங்களைத் தவிர்க்கவும்
அதிக வெப்பமும், சூடான இடங்களில் ஸ்மார்ட்ஃபோனை வைப்பதும் அதன் பேட்டரி ஆயுளை விரைவில் சேதப்படுத்தலாம். எனவே உங்கள் ஸ்மார்ட்ஃபோனை வெப்பத்தில் இருந்து விலக்கி வைக்க வேண்டும்.