சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எம்14 மாடல் ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.


சாம்சங் நிறுவனத்திம் மலிவு விலை ஸ்மார்ட்போன்:


சாம்சங் நிறுவனம் இந்தியாவின் முன்னணி ஸ்மார்ட் போன் விற்பனை நிறுவனமாக உள்ளது. ஸ்மார்ட் போன்கள் மட்டுமின்றி கணினி, டேப், இயர் போன் உள்ளிட்ட சாதனங்களை சந்தையில் கொண்டுள்ளது. இந்நிலையில் தான், இந்திய சந்தையில் தனது மலிவு விலை ஸ்மார்ட்போன்களின் எண்ணிக்கையை விரிவுபடுத்த சாம்சங் நிறுவனம் முடிவு செய்துள்ளது. கடந்த ஆண்டு கேலக்ஸி எம்13 5ஜி ஸ்மார்ட் போன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. அதன் வரிசையில் தற்போது சம்சங் கேலக்ஸி எம்14 5ஜி ஸ்மார்ட்போனை மலிவு விலையில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 


கேலக்ஸி எம்14 வெளியீடு:


 அமேசான் நிறுவனத்தின் லைவ் - ஈவண்ட் மூலம் கேலக்ஸி எம்14 5ஜி ஸ்மார்ட் போன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து இந்த புதிய மாடல் ஸ்மார்ட் போன் வரும் 21ம் தேதி நண்பகல் 12 மணி முதல்  சாம்சங்கின் அதிகாரப்பூர்வ இணையதளம், சாம்சங் விற்பனை நிலையங்கள் மற்றும் பிரத்யேகமாக அமேசான் தளங்களில் விற்பனைக்கு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


சிறப்பம்சங்கள்:


சாம்சங் நிறுவனத்தின் புதிய மலிவு விலை 5ஜி ஸ்மார்ட்போனில் பல்வேறு சிறப்பம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. அதன்படி, இந்த ஸ்மார்ட்போன் Exynos 1330 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது.  இதன்  பின்புறத்தில் 50MP டிரிபிள் ரியர் கேமரா அமைப்பு வழங்கப்பட்டுள்ளது. அதோடு, 2MP டெப்த் சென்சார் மற்றும் மற்றொரு 2MP மேக்ரோ சென்சாரும் பொருத்தப்பட்டுள்ளது. போனின் முன்புறத்தில் 13MP செல்ஃபி கேமராவும் வழங்கப்பட்டுள்ளது. 


பாதுகாப்பு அம்சங்கள்:


ஆண்ட்ராய்ட் 13 இயங்குதளத்தின் அடிப்படையிலான OneUI 5.1 கோர் மூலம் இயங்கும்.  2 ஜெனரேஷன் வரை இதை அப்டேட் செய்துகொள்ளலாம். 4 ஆண்டுகளுக்கான  செக்யூரிட்டி அப்டேட்களையும் செய்து கொள்ளலாம். பாதுகாப்பு போல்டர்களான  சாம்சங் க்னாக்ஸ், வாய்ஸ் போகஸ், சாம்சங் வாலட் ஆகியவையும், கேலக்ஸி எம்14 மாடல் ஸ்மார்ட்போனில் வழங்கப்பட்டுள்ளது. அதோடு 25W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் ஒரு பெரிய 6000mAh பேட்டரியும் இணைக்கப்பட்டுள்ளது. இது, USB Type-C போர்ட் மூலம் சார்ஜ் செய்யப்படும்.


விலை விவரங்கள்:


6.6 இன்ச் அளவிலான தொடுதிரை வசதி கொண்டுள்ள இந்த ஸ்மார்ட்போன், இரண்டு ஸ்டோரேஜ் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் உடன் வரும் வேரியண்டின் விலை ரூ.13.490 எனவும், 6 ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் உடன் வரும் வேரியண்டின் விலை ரூ.14,990 எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய மாடல் ஸ்மார்ட்போன், ஐசி சில்வர், பெர்ரி ப்ளூ மற்றும் ஸ்மோக்கி டீல் என மூன்று நிறங்களில் கிடைக்கிறது.