Redmi 14C 5G அறிமுகம் செய்துள்ளது Xiomi. பட்ஜெட் விலையில் கிடைக்கும் 5ஜி ஸ்மாட்ஃபோனில் உள்ள வசதிகள் பற்றி காணலாம்.
Xiaomi-யின் துணை நிறுவனமான ரெட்மி தனது புதிய ரெட்மி 14C ஸ்மாட்ஃபோன் 6.88 - இன்ச் டிஸ்ப்ளே (720x1640 pixels) 120Hz ரெசொல்யூசன், ஸ்னாப்டிராகன் 4 ஜெனரேஷன் 2 ப்ராசஸர் கொண்டுள்ளது.
Redmi 14C 5G:
HyperOS skinம, இரண்டு சிம் கார்டு பயன்படுத்தலாம். 600 nits டிஸ்ப்ளே, 6GB of LPDDR4X RAM இதை 12GB வரை எக்டண்ட் செய்து கொள்ளலாம். Starlight Blue, Stardust Purple, மற்றும் Stargaze Black என்ற மூன்று வகைகளில் கிடைக்கிறது.ஸ்கிர்னில் TUV ப்ளூ லைட் குறைவாக இருக்க, ஃப்ளிக்கல் ஃப்ரி ஆப்ரேசன், சர்கார்டியன் ஸ்டாண்டர்ஸ், அதிக நேரம் ஸ்க்ரீன் பார்ப்பதால் கண்களில் ஏற்படும் பாதிப்புகளை குறைப்பது உள்ளிட்ட வசதிகள் வழங்கப்பட்டுள்ளன.
அன்றாட தேவைகளுக்கு மல்டி டாஸ்க் செய்யும் வகையிலான ஹைபர் ஒ.எஸ். கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு ஒ.எஸ். அப்டேட் கொடுக்கப்பட்டுள்ளது.
பேட்டரியை பொறுத்தவரையில் 5160mAh பேட்டரி 18W விரைவு சார்ஜிங், 33W சார்ஜர் உடன் வருகிறது. ஃபோட்டோகிராபி பிடிக்கும் என்பவர்களுக்கு கேமரா பல்வேறு சிறப்புகள் கொடுக்கப்பட்டுள்ளது. 50 மெகாபிக்சல் சென்சார், அட்வான்ஸ் ஏ.ஐ. சிறப்பு வசதிகள் உள்ளிடவை கொண்ட கேமராவாக உள்ளது.
விலை விவரம்:
Redmi 14C மாடல் விலை ரூ.9,999 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வெண்ணிலா வேரியண்ட்GB RAM மற்றும் 64GB ஸ்டோரேஜ் கொண்ட மாடலின் விலைர் ரூ. 9,999 ஆக உள்ளது.
4GB RAM உடன் 128GB ஸ்டோரேஜ் ஸ்மாட்ஃபோனின் விலை ரூ. 10,999 ஆகவும் 6GB RAM உடன் 128GB ஸ்டோரேஜ் உடன் ரூ. 11,999 ஆகவும் விற்பனையாக இருக்கிறது.
விற்பனை எப்போது?
Redmi 14C ஸ்மாட்ஃபோன் விற்பனை ஜனவரி, 10-ம் தேதி மதியம் 12 மணிக்கு தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. Xioami விற்பனையகங்கள், அமேசான், ஃபிலிப்கார்ட் உள்ளிட்ட ஆன்லைன் தளங்களில் விற்பனையாகும்.