ரியல்மி 14X 5G மாடல் வெளியாகியுள்ளது. அதன் சிறப்பம்சங்கள், விலை உள்ளிட்ட விவரங்களை காணலாம்.
6,000 mAh பேட்டரி, 5ஜி உள்ளிட்ட சிறப்புகளுடன் கிடைக்கிறது. ரியல்மி 14X 5G 6,000mAh பேட்டரி உடன் 45W விரைவு சார்ஜிங் உடன் வருகிறது. 0 to 50% சார்ஜ் 38 நிமிடங்களில் எட்டிவிடும். 93 நிமிடங்களில் 100 சதவீத சார்ஜை எட்டிவிடும். முழு நாளும் பல்வேறு வேலைகளுக்கு பயன்படுத்தும்படி வடிவமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
6.67-inch HD + IPS LCD டிஸ்ப்ளே, வீட்டியோ பார்ப்பது, வீடியோ கேமிங், அன்றாட வேலைகளுக்கு பயன்படுத்து என்ற நோக்கத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.
6GB + 128GB, 8GB + 128GB, மற்றும் 8GB + 256GB. மூன்று ஸ்டோரேஜ் வேரியண்ட்களில் கிடைக்கிறது. MediaTek Dimensity chipset சாஃப்ட்வேர் கொடுக்கப்பட்டுள்ளது. ஹைப்ரிட் 2 சிம், ஆண்ட்ராய்ட் 15 ஓ.எஸ். 50 MP கேமரா, 8 MP செல்ஃபி கேமரா வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளன. கருப்பு, கோல்ட், சிவப்பு ஆகிய மூன்று நிறங்களில் கிடைகும். 6GB + 128G ஸ்மார்ட்ஃபோன் விலை ரூ.14,999 ஆகவும் 8GB + 128G ஸ்டோரேஜ் விலை ரூ.15,999 ஆகவும் இருக்கும் என்று தெரிவிக்கப்படுட்ள்ளது. இந்த மாடலில் விலை இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. இருந்தாலும், ரூ.15 ஆயிரத்திற்குள் கிடைக்கும் 5G ஸ்மார்ட்ஃபோன் ஆக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.