OnePlus 10T 5G:


 இந்தியாவில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கக்கூடிய மொபைல்போன்தான் OnePlus 10T 5G. ஆண்ட்ராய்ட் மொபைல்பிரியர்களிடம் அதிகம் நம்பிக்கை பெற்ற ஸ்மார்ட்போன் நிறுவங்களுள் ஒன்பிளஸும் ஒன்று. மீடியம் பட்ஜெட் மொபைல் நிறுவனமான ஒன்பிளஸ் தற்போது தனது புதிய OnePlus 10T 5G  மொபைலை இந்தியாவில் விரைவில் அறிமுகப்படுத்தும் என செய்திகள் வெளியானது . அதன் அடிப்படையில் வருகிற ஜூலை 25 முதல் ஆகஸ்ட் 1 க்கு இடைப்பட்ட நாட்களில் மொபைல் இந்தியாவில் அறிமுகமாகும் என இம்மாத தொடக்கத்தில் செய்திகள் வெளியான நிலையில் தற்போது ஆகஸ்ட் 3 ஆம் தேதிதான் மொபைல்போனை இந்தியாவில் நிறுவனம் வெளியிடும் என சில தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் இன்னும் உறுதியாகவில்லை. இதே தேதியில்தான் உலக சந்தையிலும் OnePlus 10T 5G ஸ்மார்ட்போன் அறிமுகமாகவுள்ளது.






OnePlus 10T 5G  வசதிகள்


OnePlus 10T ஆனது Snapdragon 8+ Gen 1  புராஸசருடன் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 50 எம்பி பிரைமரி லென்ஸ், 8 எம்பி அல்ட்ராவைடு ஷூட்டர் மற்றும் 2 எம்பி மேக்ரோ/டெப்த் லென்ஸ் ஆகியவற்றைக் கொண்ட டிரிபிள் ரியர் கேமரா அமைப்பை கொண்டிருக்கும் . செல்ஃபி பிரியர்கள் 16 எம்பி செல்ஃபி ஷூட்டர் கேமராவை எதிர்பார்க்கலாம்.OnePlus 10T ஆனது 120Hz புதுப்பிப்பு வீதம் மற்றும் FHD+ தெளிவுத்திறனுடன் 6.7-இன்ச் LTPO 2.0 AMOLED திரையைக் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.150 W சார்ஜிங் அடாப்டருடன் 4,800 mAh பேட்டரி வசதியுடன் களமிறங்கவுள்ளது. இந்தியாவில் மட்டும்தான் 150 வோல்ட் , மற்ற நாடுகளில் 160 வோல்ட் அடாப்டராக இருக்கும் என கூறப்படுகிறது.






விலை மற்றும் வெளியீட்டு விவரங்கள் :


OnePlus 10T 5G ஆனது இரண்டு வண்ண வகைகளில் கிடைக்கும் - ஜேட் கிரீன் மற்றும் மூன்ஸ்டோன் பிளாக். தற்போது வெளியான தகவலின் அடிப்படையில் மூன்ஸ்டோன் பிளாக் மாறுபாடு மட்டும் 16 ஜிபி ரேம் கொண்டதாக இருக்கும், அதே சமயம் ஜேட் கிரீன் பதிப்பில் 16 ஜிபி பதிப்பு இருக்காது. 16 ஜிபி ரேம் மாடல் இந்திய மற்றும் சீன சந்தைகளுக்கு மட்டுமே வரக்கூடும் என்று passionategeekz அறிக்கை கூறுகிறது. OnePlus 10T ஆனது 8 ஜிபி, 12 ஜிபி மற்றும் 16 ஜிபி ரேம் மாறுபாடுகள் மற்றும் 128 ஜிபி மற்றும் 256 ஜிபி உள்ளீட்டு சேமிப்பு வசதிகளுடன் களமிறங்களாம். 512 ஜிபி சேமிப்பு மாறுபாடும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.இந்த போனின் அடிப்படை மாறுபாட்டின் விலை ரூ.49,999  ஆக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஃபோனில் ரூ. 1,500 வரை வங்கிச் சலுகை இருக்கும், எனவே இந்தச் சலுகை உங்களுக்குச் செல்லுபடியாகும் பட்சத்தில் ரூ.48,499-க்கு மொபைலை பெற்றுக்கொள்ளலாம்.முதற்கட்டமாக மொபைபோன் அமேசானில் அறிமுகமான முதல் வாரத்திலேயே விற்பனைக்கு வரும் என கூறப்படுகிறது.