OnePlus 10T 5G:
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட OnePlus நிறுவனத்தில் OnePlus 10T 5G ஸ்மார்ட்போன் இன்று உலக சந்தையில் அறிமுகமாகவுள்ளது. நியூயார்க்கில் நடைபெறவுள்ள இந்த நிகழ்ச்சியில் பார்வையாளர்கள் பங்கேற்க முடியும். அதற்கான டிக்கெட்டுகள் ஒன்பிளஸ் இணையதளம் வாயிலாக கிடைக்கும். இது தவிர ஒன் பிளஸ் நிறுவனத்திற்கு சொந்தமான யூடியூப் பக்கத்தில் இன்று மாலை 7.30 மணியளவில் OnePlus 10T 5G மொபைல் போன் அறிமுகத்தை நேரலையில் கண்டு ரசிக்கலாம்.Qualcomm Snapdragon 8+ Gen 1 SoC மூலம் இந்த கைபேசி இயங்கும் என்பதை OnePlus ஏற்கனவே உறுதிப்படுத்தியுள்ளது. மேலும் எதிர்பார்க்கப்படும் வசதிகள் குறித்து பார்க்கலாம்.
வசதிகள்:
OnePlus 10T ஆனது Snapdragon 8+ Gen 1 புராஸசருடன் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 50 எம்பி பிரைமரி லென்ஸ், 8 எம்பி அல்ட்ராவைடு ஷூட்டர் மற்றும் 2 எம்பி மேக்ரோ/டெப்த் லென்ஸ் ஆகியவற்றைக் கொண்ட டிரிபிள் ரியர் கேமரா அமைப்பை கொண்டிருக்கும் . செல்ஃபி பிரியர்கள் 16 எம்பி செல்ஃபி ஷூட்டர் கேமராவை எதிர்பார்க்கலாம்.OnePlus 10T ஆனது 120Hz புதுப்பிப்பு வீதம் மற்றும் FHD+ தெளிவுத்திறனுடன் 6.7-இன்ச் LTPO 2.0 AMOLED திரையைக் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.150 W சார்ஜிங் அடாப்டருடன் 4,800 mAh பேட்டரி வசதியுடன் களமிறங்கவுள்ளது. இந்தியாவில் மட்டும்தான் 150 வோல்ட் , மற்ற நாடுகளில் 160 வோல்ட் அடாப்டராக இருக்கும் என கூறப்படுகிறது.OnePlus 10T 5G ஆனது இரண்டு வண்ண வகைகளில் கிடைக்கும் - ஜேட் கிரீன் மற்றும் மூன்ஸ்டோன் பிளாக். தற்போது வெளியான தகவலின் அடிப்படையில் மூன்ஸ்டோன் பிளாக் மாறுபாடு மட்டும் 16 ஜிபி ரேம் கொண்டதாக இருக்கும், அதே சமயம் ஜேட் கிரீன் பதிப்பில் 16 ஜிபி பதிப்பு இருக்காது. 16 ஜிபி ரேம் மாடல் இந்திய மற்றும் சீன சந்தைகளுக்கு மட்டுமே வரக்கூடும் என்று passionategeekz அறிக்கை கூறுகிறது.AI சிஸ்டம் பூஸ்டர் 2.1 இருப்பதை டீஸர் உறுதி செய்துள்ளது.
விலை :
OnePlus 10T 5G கைபேசியின் அறிமுகத்திற்கு முன்னதாக விலைகள் அறிவிக்கப்பட்டன. முன்பு வெளியான அறிக்கையின்படி, OnePlus 10T 5G ஆனது அமேசானின் UK இணையதளத்தில் GBP 799 (தோராயமாக ரூ. 76,500) விலையில் கிடைக்கும் என கூறப்பட்டது. இந்த பட்டியல் பின்னர் இ-காமர்ஸ் நிறுவனத்தால் நீக்கப்பட்டதாக கூறப்படுகிறது. OnePlus 10T 5Gயின் விலையை இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.