நத்திங் மொபைல் :
பெயர் மட்டுமல்ல மொபைலும் வித்தியாசம்தான். கடந்த ஜூலை 12 ஆம் தேதி மிகுந்த எதிர்பார்ப்பிற்கு மத்தியில் வெளியான மொபைல்போன்தான் Nothing Phone (1) . Carl Pei இன் தொழில்நுட்ப பிராண்டான இது வெளியாவதற்கு முன்னதாகவே இதன் வடிவமைப்பு மற்றும் பட்ஜெட் விலையில் இடம்பெற்றிருந்த சிறப்பம்சங்களுக்காக கூடுதல் வரவேற்பை பெற்றிருந்தது.
ஏகப்பட்ட விமர்சனங்கள்:
ஆனால் வெளியாகி ஒரு வாரம் ஆவதற்கு முன்னதாகவே மொபைலில் ஏகப்பட்ட பிரச்சனைகள் இருப்பதாக , ட்விட்டர் மற்றும் ரெடிட் போன்ற பல்வேறு சமூக ஊடக தளங்களில் விமர்சனங்கள் வந்த வண்ணம் உள்ளன. சிலர் செல்ஃபி கேமராவை சுற்றி டெட் பிக்சல் உள்ளதாக புகார் அளித்துள்ளனர். ஒருவர் ஃப்ளிப்கார்ட்டிலிருந்து ஸ்மார்ட்போனை வாங்கி, அதில் கிரீன் டிட்டை கண்டு மொபைல் திருப்பி அனுப்பி வேறு மொபைலை வாங்கியிருக்கிறார் . அதிலும் இதே பிரச்சனையை சந்தித்தாக கூறி வீடியோவையும் வெளியிட்டிருக்கிறார்.
இது நிறுவனத்தின் மீதான நம்பகத்தன்மைக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கிறது.நத்திங் மொபைலானது ஸ்மார்ட்போன் 8ஜிபி/128ஜிபி (INR 32,999), 8ஜிபி/256ஜிபி (INR 35,999), மற்றும் 12ஜிபி/256ஜிபி (INR 38,999) ஆகிய மூன்று வகைகளில் அறிமுகப்படுத்தப்பட்டது.