நாம் பயன்படுத்தும் ஸ்மார்ட்போன்களில் சார்ஜ் நீண்ட நேரம் வராதது தான் ஒரே குறை. எவ்வளவு தான் புதிய அப்டேட்டுகள் வந்ததாலும், சார்ஜ்க்கான எந்தவொரு அப்டேட்டும் புதிதாக வரவில்லை என்பது தான் தற்போதைய நிலைமை. அதற்கு சக்தி வாய்ந்த பவர் பேங்குகள் பெரிதும் உதவுகின்றன. இது பயணங்களில் உங்கள் போனை 100% சார்ஜிலேயே வைக்க பயன்படுகிறது. இதனை ஒருமுறை சார்ஜ் செய்தாலே போதும், 2 முதல் 3 முறை முழுவதும் சார்ஜ் செய்து கொள்ளலாம். ஸ்மார்ட்போன்களில் நாளுக்கு நாள் புதிய அப்டேட்டுகளை கொண்டுவந்தாலும், அதிக நேரம் சார்ஜ் நிற்க கூடிய எந்தவொரு சார்ஜிங் அப்டேட்டும் இன்றுவரை வந்ததில்லை. அதனாலேயே அடிக்கடி சார்ஜ் செய்ய வேண்டிய கட்டாய சூழல் உருவாகிறது.
அதனால் கூடுதல் சக்தியான பவர் பேங்கை best power bank பயன்படுத்துவது சிறந்தது. புதிது புதிதாக மொபைல் போன்கள், ஸ்மார்ட் வாட்ச், ஏர்பட்ஸ், ஏர்ஃபோன் ஆகிய எவை வெளியானாலும் அது பெரிதாகி பேசப்படும், நிறைய பேர் வாங்குவதற்கு ப்ரீ புக்கிங் எல்லாம் செய்வார்கள். அப்படி ஒரு வரவேற்பு எந்த நிறுவனம் புதிதாக பவர் பேங்க் அறிமுக படுத்தினாலும் கிடைப்பதில்லை. அதற்கு காரணமும் உண்டு, ஒரு பவர் பேங்கில் அப்படி என்ன புதிய அம்சங்கள் இருக்க போகிறது என்கிற எண்ணம் தான்! அம்மாதிரியான எண்ணங்களையும் உடைத்து, புதிய நோக்கத்தின் கீழ் வெளியாகியுள்ள ஒரு பவர் பேங்க் தான் - ரியல்மி 10,000 எம்ஏஎச் பவர் பேங்க்! பல ஆண்டு காலமாக ஒரே மாதிரியான அம்சங்களை கொண்டு வெளியாகும் பவர் பேங்களின் மத்தியில் ரியல்மி நிறுவனம் அதன் புதிய பவர் பேங்கில் சில புதுமைகளைக் கொண்டு வர முயற்சி செய்துள்ளது.
அட வெறும் பேட்டரி அதிலென்னப்பா புதுசு பழசு, நல்லா சார்ஜ் ஏறினால் போதாதா என்கிறீர்களா… இல்லை இது ஒரு படி மேலே. இந்தியாவில் ரூ.1,299 க்கு வாங்க கிடைக்கும் இந்த புதிய 10,000 எம்ஏஎச் ரியல்மி பவர் பேங்க் ஆனது அப்படி என்ன புதுமைகளை கொண்டுள்ளது? இதனை நம்பி வாங்கலாமா வேண்டாமா? பார்க்கலாம்!
வெளித்தோற்றம்
பார்ப்பதற்கு வண்ணமயமாக, கண்ணை கவரும் விதத்தில் அறிமுகமாகி உள்ளது. வழக்கமான ரியல்மீயின் ஒரு க்ரோம் மஞ்சள் நிறம் இம்முறையும் மாடர்ன் லுக்கை தர தவறவில்லை. பிளாக்… பியூர் க்ளாஸ்! பிறகென்ன, ஒரு இளஞ்சிவப்பு நிற பவர் பேங்க் வெளியாகியுள்ளது. ரியல்மிக்கும், பவர் பேங்க்குகளுக்குமே புதிது இந்த நிறம். பார்ப்பதற்கும் கவர்ச்சிகரமாகவே உள்ளது.
உள்கட்டமைப்பு
ரியல்மி பவர் பேங்க் ஆனது யூ.எஸ்.பி டைப்-சி வழியலான 18W டூ-வே ஃபாஸ்ட் சார்ஜிங்கை வழங்குகிறது. அதாவது, இந்த ரியல்மி பவர் பேங்கை கொண்டு நீங்கள் ஸ்மார்ட்போன்களையும் வேகமாக செய்யலாம், அதே போர்ட்டைப் பயன்படுத்தி பவர் பேங்கையும் நீங்கள் வேகமாக சார்ஜ் செய்யலாம்.
இதில் 10,000 எம்ஏஎச் லித்தியம்-பாலிமர் பேட்டரி உள்ளது மற்றும் ஒரு நிலையான யூ.எஸ்.பி டைப்-ஏ போர்ட் மற்றும் ஒரு டைப்-சி போர்ட் உள்ளது.இவை இரண்டுமே 18W அளவிலான அதிகபட்ச பவர் அவுட்புட் கேப்பாசிட்டியை கொண்டுள்ளது. இந்த பவர் பேங்கில் ஓவர் சார்ஜிங் மற்றும் டிஸ்சார்ஜிங்கிற்கான 12 லேயர்ஸ் ப்ரொடெக்ஷன் இருப்பதாக ரியல்மி நிறுவனம் கூறுகிறது.
சார்ஜிங் நேரம் எவ்வளவு?
சாதாரண 10W சார்ஜரைப் பயன்படுத்தினால், இந்த பவர் பேங்கை முழுமையாக சார்ஜ் செய்ய ஆறு மணி நேரம் ஆகும். 18W சார்ஜரைப் பயன்படுத்தினால், இதன் 100% சார்ஜிங் நேரம் ஆனது மூன்று மணி நேரத்தில் முடியும். நாம் பயன்படுத்தும் ஸ்மார்ட்போன் பாஸ்ட் சார்ஜிங் அம்சம் கொண்ட ஸ்மார்ட்போனாக இருந்தால், முழுமையாக சார்ஜ் செய்ய ஒரு மணி நேரத்திற்கு மேல் ஆகும்.
அப்படி என்னதாங்க புதுசு?
புதுமையான அம்சம் என்று பேசும்போது, இந்த ரியல்மி பவர் பேங்க் ஆனது ஸ்மார்ட்போன்களை மட்டுமின்றி லேப்டாப்களையும் சார்ஜ் செய்கிறது. லேப்டாப் சார்ஜிங்கை சாத்தியப்படுத்த நீங்கள் ஒரு புதிய ஆப்பிள் மேக்புக் ஏர் அல்லது ப்ரோ அல்லது சமீபத்திய அறிமுகம் ஆன விண்டோஸ் லேப்டாப்களை வைத்திருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது யூ.எஸ்.பி டைப்-சி இன்புட் சார்ஜிங் கொண்ட புதிய லேப்டாப் மாடலை பயன்படுத்தினால் மட்டுமே இது சாத்தியமாகும் என்று அர்த்தம்.
சார்ஜ் செய்து பார்த்தோம்!
இந்த ரியல்மி பவர் பேங்கை கொண்டு சமீபத்தில் அறிமுகமான விண்டோஸ் லேப்டாப்பை சார்ஜ் செய்து டெஸ்ட் செய்தோம். நாம் நினைப்பதை விட நன்றாகவே வேலை செய்தது. இருப்பினும், சார்ஜிங் நேரம் சற்று அதிகமாக இருந்தது, ஏனெனில் இந்த பவர் பேங்கின் அதிகபட்ச அவுட்புட் பவர் ஆனது 18W மட்டுமே, ஆனால் நாங்கள் பயன்படுத்திய லேப்டாப்பின் பவர் அடாப்டர் கூடுதல் திறன் வாய்ந்ததாக இருந்தது. வேறு வழியே இல்லை என்கிற நேரத்தில் அல்லது மோசமான சூழ்நிலைகளில் இதை ஒரு பேக்-அப் ஆக பயன்படுத்திக்கொள்ளலாம் என்பது தான் இறுதி ரிசல்ட்! மொபைல் சார்ஜிங்கிற்கும், டைப்-சி போர்ட் கொண்ட லேப்டாப் வைத்திருப்பவர்களுக்கும் ஒரே நேரத்தில் உதவுவதால் அவர்களுக்கு மிகவும் உதவிகரமாக இருக்கலாம்!