ஸ்மாட்ஃபோன் சந்தையில் பல புது பிராண்டுகள் வந்துகொண்டே இருந்தாலும், பல காரணங்களுக்காக மோட்டோராலா நிறுவனத்தின் ஃபோன்களுக்கு தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது. அந்தவகையில் தனது பயனாளர்களுக்கு புதிய அப்டேட்களுடன் ஸ்மாட்ஃபோன்களை மோட்டோ வழங்கி வருகிறது. தற்போது, ஜி சீரிஸில் ஜி22 ரக பட்ஜெட் விலையில் புதிய ஸ்மாட்ஃபோனை அறிமுகம் செய்திருக்கிறது.
இந்நிலையில் நீண்ட நாட்களாக எதிர்பார்த்து காத்திருந்த Moto G22 ஸ்மார்ட்போன் வரும் 13 ஆம் தேதி முதல் சந்தையில் விற்பனைக்கு கிடைக்கும்.
இந்த மொபைலின் விலை இந்தியாவில் ரூ.10,999. அறிமுக விலை தள்ளுபடியாக, ரூ.9,999 -இல் கிடைக்கிறது. 4ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி மாடல் இது. இந்த மொபைல் ஏற்கெனவே ஐரோப்பாவில் வெளியான நிலையில் அங்கு கிட்டத்தட்ட ரூ. 14ஆயிரத்துக்கு இந்த மாடல் விற்பனையாகிறது.
இதன் டிஸ்பிளே 6.5 இஞ்ச் ஹெச்.டி. டிஸ்பிளே. 90Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட 720x1,600 பிக்சல்கள் ஆகிய சிறப்பம்சங்களை கொண்டது.
கேமராவை பொறுத்தவரை 3 வகையான பின்பக்க கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. 50 மெகாபிக்ஸல் கொண்ட பிரைமரி கேமராவும், 8 மெகா பிக்ஸல் அல்ட்ரா வைட் ஆங்கில் லென்ஸ், மற்றும் 2 மெகாபிக்ஸல் மேக்ரோ லென்ஸ் மற்றும் டெப்த் ஃபோகஸ் வசதிகளுக்கு இரண்டு கேமராக்கள் கொடுக்கப்பட்டிருக்கும். செல்ஃபி கேமராவை பொறுத்தவரை 16 மெகாபிக்ஸல் கொண்டதாக இருக்கும்.
இது ஐஸ்பர்க் ப்ளூ ( Iceberg Blue) காஸ்மிக் ப்ளாக் (Cosmic Black) ஆகிய இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. மிண்ட் கிரீன் (Mint Green) நிற ஸ்மாட்ஃபோன் விரைவில் அறிமுகமாக இருக்கிறது.
இந்த மாடலில் 5000 mah பேட்டரி, 20 வோல்ட் அதி வேக சார்ஜிங், ஆண்ராய்ட் 12 போன்ற புதிய அப்டேட்களுடன் கிடைக்கிறது இந்த மோட்டோ ஜி22 மாடல் ஸ்மாட்ஃபோன். மேலும், இது Moto G71 மற்றும் Moto Edge 30 Pro ஆகியவற்றில் கிடைக்கும் சில அம்சங்கள் இந்த பட்ஜெட் விலை ஃபோனிலும் கிடைக்கிறது என்பதுதான் இதன் சிறப்பு.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்