மோட்டரோலா பிராண்ட் பலருக்கும் பிடித்தமான ஒன்று. அந்நிறுவனமும் தனது வாடிக்கையாளர்களை அடிக்கடி புதிய அப்டேட்களை வழங்கி மகிழ்ச்சிப்படுத்தும். அந்த வகையில், சமீக காலமாக, மோட்டரோலா நிறுவனம் பட்ஜெட் விலையில் பல சிறப்பம்சங்களுடன் இருக்கும் ஸ்மாட்ஃபோன்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில், தற்போது ஐரோப்பிய நாடுகளில் இரண்டு வாரங்களுக்கு முன்பு, அறிமுகம் செய்யப்பட்ட மோட்டோ ஜி-சீரிஸ் அடுத்த வாரம் முதல் இந்தியாவில் கிடைக்க இருக்கிறது. Moto G52 என்ற புதிய மாடல் ஸ்மார்ட்ஃபோன் பல சிறப்பம்சங்களை கொண்டுள்ளது.


மோட்டோ ஜி52 ஆனது குவால்கம் ஸ்னாப்ட்ராகன்  680SoC, அடர்னோ 610 GPU மற்றும் 4 ஜிபி ராம் உள்ளிட்ட வசதிகளுடன் வருகிறது. மேலும், இதில் ஆண்ட்ராய்டு 12 இயங்குதளமாக கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், இதை ஆண்ட்ராய்டு 13 உடன் அப்கிரேட் செய்வதாகவும், மூன்று ஆண்டுகளுக்கான செக்யூரிட்டி அப்டேட்களை வழங்க இருப்பதாவும் மோட்டரோலா நிறுவனம் தெரிவித்திருக்கிறது.


மோட்டோ ஜி52 மெமரி ஸ்டோரேஷ்  4 ஜிபி, ராம் மற்றும் 128ஜிபி ஆகிய இரண்டு வேரியன்களில் கிடைக்கிறது






இந்த மாடல் ஸ்மாட்ஃபோனின் டிஸ்பிளே, 6.6 இன்ச் முழு-எச்டி+ (1,080x2,400 பிக்சல்கள்) AMOLED டிஸ்ப்ளே கொண்டிருக்கிறது. மேலும், 90 ஹெர்ட்ஸ் ரிஃரெஷிங் ரேட், ஒற்றை எல்.இ.டி. ப்ளாஷ் உடன் டிரிபிள் ரியர் கேமரா, பின்பக்க கேமராவானது  50-மெகாபிக்சல் முதன்மை சென்சார், 8-மெகாபிக்சல் அல்ட்ரா-வைட்-ஆங்கிள் டெப்த் சென்சார் மற்றும் 2-மெகாபிக்சல் மேக்ரோ சென்சார் என பல அம்சங்களை கொண்டுள்ளது. செல்ஃபி கேமிரா 16 மெகாபிக்சல் சென்சாரை கொண்டிருக்கிறது.


இத்துடன், 3.5mm ஹெட்ஃபோன் ஜாக், ஒலி சிறக்க டால்பி ஆடியோ வசதி,  மற்றும் USB டைப் சி போர்ட் ஆகியவை அடங்கும். இதில் கூடுதல் சிறப்பு என்னெவென்றால்,  ஸ்மார்ட்போனில் பக்கவாட்டில் கைரேகை ஸ்கேனர் உள்ளது.


பேட்டரியை பொருத்தவரையில், சமீபத்திய மோட்டோ மாடல்களில் இருப்பது போல, 5,000mAh துரித சார்ஜிங் வசதியை கொண்டிருக்கிறது. இது ஒருமுறை சார்ஜ் செய்தால் 37.9 மணிநேர பேக்அப் வழங்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.


இந்த மாடலில் ஸ்டோரேஜை ஒரு டெரா பைட் வரை எக்ஸ்பேண்ட் செய்து கொள்ளலா. 4+64GB என்ற வேரியண்டின் விலை ரூ. 14,499 ஆகும். மோட்டோ ஜி 52 6+128GB வேரியண்ட் 15,499 ரூபாய்க்கு விற்பனை செய்ய இருக்கிறது.


மோட்டோ ஜி 52 மாடல் Charcoal grey மற்றும் Porcelain white ஆகிய இரண்டு வண்ணங்களில் கிடைக்கிறது. 


மோட்டோ ஜி 52 மொபைலின் விற்பனை ஃபிலிப்கார்ட்டில் வரும் மே மாதம் 3 ஆம் தேதி முதல் தொடங்குகிறது.


பட்ஜெட் விலை பல்வேறு வசதிகளுடன், நல்ல பேட்டரி பேக்அப், ஸ்டோரேஜ் எதிர்ப்பார்பவர்களுக்கு இந்த மோட்டோ ஜி52 சிறந்த சாய்ஸ் என்றே சொல்லலாம்.


 




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண