iPhone 17 Pro: ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 17 ஸ்மார்ட் போன்களில் உள்ள புதிய அம்சங்கள் உள்ளிட்ட விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
ஆப்பிள் ஐபோன் 17 ஸ்மார்ட் போன்
அமெரிக்காவின்ஆப்பிள் பார்க்கில் உள்ள ஸ்டீவ் ஜாப்ஸ் தியேட்டரில் நடைபெற்ற 'ஆவ் டிராப்பிங்' கண்காட்சியில், ஐபோன் 17 ப்ரோ சீரிஸ் ஸ்மார்ட் போன்கள் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் அறிமுகம் செய்யப்பட்டன. இந்த நிகழ்வில் நான்கு புதிய ஐபோன்கள் காட்சிப்படுத்தப்பட்டன. அதன்படி ஐபோன் 17, ஐபோன் ஏர், ஐபோன் ப்ரோ மற்றும் ப்ரோ மேக்ஸ். இவை தவிர, ஆப்பிள் நிறுவனமானது தனது வாட்ச் சீரிஸ் 11, வாட்ச் அல்ட்ரா 3, வாட்ச் எஸ்இ 3 மற்றும் ஏர்போட்ஸ் ப்ரோ 3 போன்ற புதிய சாதனங்களையும் காட்சிப்படுத்தி, சர்வதேச சந்தையில் அறிமுகப்படுத்தியது.
இந்தியாவில் ஐபோன் 17 ப்ரோ விலை
ஐபோன் 17 ப்ரோ 256 ஜிபி, 512 ஜிபி மற்றும் 1 டிபி ஸ்டோரேஜ் விருப்பங்களில் கிடைக்கும், ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ் 256 ஜிபி, 512 ஜிபி, 1 டிபி மற்றும் முதல் முறையாக 2 டிபி ஸ்டோரேஜ் திறன்களில் வருகிறது. இரண்டு மாடல்களும் காஸ்மிக் ஆரஞ்சு, டீப் ப்ளூ மற்றும் சில்வர் வண்ண விருப்பங்களில் கிடிஅக்கும். அமெரிக்காவில், ஐபோன் 17 ப்ரோ $1,099 இல் தொடங்குகிறது, அதாவது இந்தியாவில் தோராயமாக ரூ.96,000. ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ் $1,199 இல் தொடங்குகிறது, இது இந்தியாவில் தோராயமாக ரூ.1,05,000 ஆகும். இந்த ஸ்மார்ட் போன்களுக்கனா முன்பதிவு அமெரிக்காவில் செப்டம்பர் 12 அதாவது வெள்ளிக்கிழமை தொடங்கும். அதேநேரம், இந்தியா உள்ளிட்ட 60க்கும் மேற்பட்ட நாடுகளில் செப்டம்பர் 19 வெள்ளிக்கிழமை முதல் கிடைக்கும். கூடுதலாக ப்ளாக், லாவெண்டர், மிஸ்ட் ப்ளூ, சேஜ் மற்றும் வெள்ளை ஆகிய வண்ண ஆப்ஷன்களும் ஐபோன் 17ல் வழங்கப்படுகின்றன.
ஐபோன் 17 ப்ரோ மற்றும் ப்ரோ மேக்ஸ் அம்சங்கள்:
ஐபோன் 17 ப்ரோ 6.3-இன்ச் சூப்பர் ரெடினா XDR டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது, அதே நேரத்தில் ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ் பெரிய 6.9-இன்ச் டிஸ்ப்ளேவை பெறுகிறது. இரண்டு ஸ்க்ரீன்களும் 120Hz வரை ProMotion, Always-On டிஸ்ப்ளே மற்றும் 3000 nits உச்ச பிரகாசத்தை ஆதரிக்கின்றன. முன் மற்றும் பின் இரண்டிலும் செராமிக் ஷீல்ட் 2 இலிருந்து பாதுகாப்பு வருகிறது, இது மேம்பட்ட கீறல் எதிர்ப்பு மற்றும் நீடித்து உழைக்கும் தன்மையை வழங்குகிறது.
ஐபோன் 17 - பேட்டரி விவரங்கள்:
சாதனங்களுக்கு சக்தி அளிப்பது புதிய A19 Pro சிப் ஆகும், இது 6-கோர் CPU மற்றும் நியூரல் ஆக்சிலரேட்டர்களைக் கொண்ட 6-கோர் GPU உடன் கட்டமைக்கப்பட்டுள்ளது. ஆப்பிள் வடிவமைத்த வேப்பர் சேம்பர் கூலிங் சிஸ்டம் உயர் செயல்திறனைத் தக்கவைக்க உதவுகிறது, குறிப்பாக கேமிங் மற்றும் கனமான பணிகளுக்கு ஏற்றதாக போனை மாற்றுகிறது.
பெரிய இண்டர்னெல் ஸ்பேஸ் மேம்பட்ட பேட்டரி ஆயுளையும் அனுமதிக்கிறது,. ப்ரோ மேக்ஸ் ஆப்பிளின் இதுவரை இல்லாத அளவுக்கு நீண்ட பேட்டரி ஆயுளை வழங்குகிறது. ஆப்பிளின் புதிய 40W USB-C பவர் அடாப்டரைப் பயன்படுத்தி இரண்டு மாடல்களும் சுமார் 20 நிமிடங்களில் 50% சார்ஜ் ஆகின்றன.
ஐபோன் 17 - கேமரா அம்சங்கள்:
கேமராக்களைப் பொறுத்தவரை, மூன்று 48MP ஃப்யூஷன் லென்ஸ்கள் உள்ளன. அதில் மெயின், அல்ட்ரா வைட் மற்றும் டெலிஃபோட்டோ ஆகியவை அடங்கும். ப்ரோ மேக்ஸில் 8x ஆப்டிகல் ஜூம் வரை உள்ளன. புதிய 18MP சென்டர் ஸ்டேஜ் முன் கேமரா வைட்-ஆங்கிள் செல்ஃபிகள், AI- உதவியுடன் கூடிய க்ரூப் போட்டோக்கள் மற்றும் 4K HDR வீடியோ பதிவு ஆகியவற்றை வழங்குகிறது. தொழில்முறை வீடியோ அம்சங்களில் ProRes RAW, Apple Log 2 மற்றும் genlock ஆகியவை அடங்கும், இவை தொழில்முறை படைப்பாளர்களை இலக்காகக் கொண்டுள்ளன.
கனெக்டிவிட்டி அம்சமானது புதிய N1 வயர்லெஸ் சிப்பால் கையாளப்படுகிறது. இது Wi-Fi 7, புளூடூத் 6 மற்றும் மேம்படுத்தப்பட்ட ஏர் டிராப் செயல்திறனை செயல்படுத்துகிறது. இரண்டு போன்களும் iOS 26 இல் இயங்குகின்றன. இது நேரடி மொழிபெயர்ப்பு, அழைப்பு திரையிடல் மற்றும் மேம்படுத்தப்பட்ட பயன்பாட்டு அனுபவங்கள் போன்ற ஆப்பிள் நுண்ணறிவு அம்சங்களை அறிமுகப்படுத்துகிறது.