ஆப்பிள் இறுதியாக ஒரு புதிய தொடக்க நிலை தொலைபேசியான ஐபோன் 16e ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. முந்தைய மாடல் வெளியீட்டிலிருந்து மூன்று வருட இடைவெளிக்குப் பிறகு, ஆப்பிள் நுண்ணறிவு, A18 சிப்செட், ஒரு புதிய செல்லுலார் மோடம், ஒரு பெரிய பேட்டரி திறன், ஃபேஸ் ஐடி மற்றும் பலவற்றை உள்ளடக்கிய அம்சங்களை ஐ-போன் 16e கொண்டிருக்கிறது. இந்நிலையில், ஐ-போன் 16e  மொபைல் குறித்தான சிறப்பம்சங்கள் குறித்தும் விலை குறித்தும் பார்ப்போம். 

Continues below advertisement

ஆப்பிள் 16e:

ஐ போன் 16 மற்றும் ஐ போன் 16e ஆகிய இரண்டு மொபைல்களின் டிஸ்பிளேவும் 6.1 இன்ச் என்ற அளவில் இருக்கிறது. இரண்டு போன்களின் கேமரா பிக்சல், சிப் என அனைத்தும் ஒன்றாக இருக்கிறது. இருப்பினும் சிலவற்றை வேறுபடுகிறது. இதை வைத்து பார்க்கும் போது குறைந்த விலையில் ஐபோனை பயன்படுத்த விரும்பும் பயனர்களுக்கு ஐபோன் 16e சரியான தேர்வாக இருக்கும் என கூறப்படுகிறது. 

ஆப்பிள் 16e டிசைனை பொறுத்து வரையில் ஆப்பிள் 14 மற்றும் ஆப்பிள் SE ஆகியவற்றை சேர்த்தது போன்று இருக்கிறது என்றும் ஆப்பிள் SE 4 போன்று இருக்கிறது என்றும் பலர் தெரிவித்து வருகின்றனர். நீங்கள் ஆப்பிள் நுண்ணறிவைப் பற்றி அதிக விருப்பம் கொண்டிருந்தால், குறைந்த விலையில் ஐபோன் 16e சிறப்பானதாக இருக்கும் என்றும் சிலர் தெரிவிக்கின்றனர்.

Continues below advertisement

கேமரா: 

பிரண்ட் கேமரா 48 MP 

செகண்டரி மெமரி 12 MP

டிஸ்ப்ளே:

15.49 cm (6.1 inch)

All Screen OLED Display

ப்ராசசர்

I phone 16 A18 ,GPU New 4 Core

ஓ.எஸ்- iOS 18

இண்டர்னல் ஸ்டாரேஜ்:

128ஜிபி / 256ஜிபி / 512ஜிபி என மூன்று ஸ்டோரேஜ் அம்சங்களில் விற்பனைக்கு வந்துள்ளது.

சிம்: -இரண்டு சிம்கள் உள்ளன ( நானோ + இ சிம் ) 

வடிவம்:

அகலம் - 71.5 மிமீஉயரம் - 146.7 மிமீஎடை - 167 கிராம்

சி டைப்ம் சார்ஜிங் அம்சத்தை கொண்டிருக்கிறது

விலை: ரூ. 60,000 

மிக முக்கியமாக, ஆப்பிள் இன்டலிஜென்ஸ் அம்சங்களின் முழு தொகுப்பும் வெளிவரும்போது, ​​ஐபோன் 16e பயனர்கள் அதை முழுமையாக அணுக முடியும். ஐபோன் 15 மாடல் அல்லது அதற்கும் குறைவான பதிப்புகளைக் கொண்ட பயனர்கள் அதை அணுக முடியாது எனவும் கூறப்படுகிறது

ஆப்பிள் இன்டலிஜென்ஸ் என்பது உங்கள் தனிப்பட்ட தகவல் மற்றும் சூழலில் அமைந்த ஒரு "தனிப்பட்ட நுண்ணறிவு" அமைப்பாக இருக்க வேண்டும். இது உங்கள் பயன்பாடுகள் முழுவதிலும் இருந்து தரவை மீட்டெடுக்கலாம் மற்றும் உங்கள் திரையில் உள்ள உள்ளடக்கத்தைக் குறிப்பிடலாம் என்றும் தகவல் தெரிவிக்கின்றன.

ஐ போன் 16e மொபைலை ஆப்பிள் வலைதளத்திலும் , ஃபிளிப்கார்ட் தளத்திலும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.