iPhone 16 Updates: உலகளவில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஆப்பிள் நிறுவனத்தின் ஐ போன் 16 மாடலை, ஆப்பிள் நிறுவனம் நேற்று அறிமுககம் செய்தது. இந்நிலையில், இதர ஐ போன்கள் விலையானது குறைந்துள்ளது.
ஐபோன் 16:
நேற்று, ஆப்பிள் நிறுவனத்தின் 'இட்ஸ் க்ளோடைம்' நிகழ்வில் ஆப்பிள் அதன் முதன்மையான ஐபோன் 16 தொடரை வெளியிட்டது. இந்நிலையில், ஆப்ப்பிள் நிறுவனம் அதன் முந்தைய ஐபோன்களின் விலையை, உடனடியாக குறைப்பு செய்துள்ளது. அதே நேரத்தில் சில தயாரிப்புகளை நிறுத்தம் செய்துள்ளதாகவும் தகவல் தெரிவிக்கின்றன.
ஐ.போன் தொடரில் நான்கு மாடல்கள் வெளியாகியுள்ளன. ஐ போன் 16, . ஐ போன் 16 ப்ளஸ், ஐ போன் 16 ப்ரோ, ஐ போன் 16 ப்ரோ மேக்ஸ் ஆகிய மாடல்கள் நுண்ணறிவு மென்பொருளுடன் கருப்பு, இளஞ்சிவப்பு, வெள்ளை, டீல் நீலம், அல்ட்ராமைரன் நிறங்களில் இருக்கிறது.
ஐ போன் 16 விற்பனை , விலை:
ஐ போன் 16 மொபைலானது வரும் செப்டம்பர் 13 ஆம் தேதி முதல், விற்பனை ஆர்டருக்கு வரும் என கூறப்படுகிறது. ஆனால், மொபைல் டெலிவரியானது, 20 ஆம் தேதிதான் கிடைக்கும் எனவும் தகவல் தெரிவிக்கின்றன.
ஐ போன் 16 ரூ. 79,000
ஐ போன் 16 பிளஸ் 89,000
ஐ போன் 16 ப்ரோ 1,19,900
ஐ போன் 16 ப்ரோ மேக்ஸ் 1,44,900
iPhone 15:
iPhone 15 மொபைலானது, கடந்த ஆண்டு ₹79,900 விலையில் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டது. இப்போது ரூ. 10,000 விலை குறைவடைந்து ரூ. 69,900 விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் ஐபோன் 15 பிளஸ் விலையிலும் இதேபோன்ற விலை குறைப்பைக் காணமுடிகிறது, அதன் முந்தைய விலை ரூ. 89,900 உடன் ஒப்பிடும்போது ரூ.79,900க்கு கிடைக்கிறது.
ஐபோன் 14:
ஆப்பிள் அதன் ஐபோன் 14 ₹59,900 ஆகவும், ஐபோன் 14 பிளஸின் விலை ₹69,000 ஆகவும் குறைக்கப்பட்டுள்ளது.
அதிகாரப்பூர்வமாக ஆப்பிள் இணையதளத்தில் உள்ள iPhone 15 மற்றும் iPhone 14 வகைகளின் விலைகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. மேலும் ஈ-காமர்ஸ் வலைத்தளங்களில் உண்மையானயைவிட மிகவும் குறைவாக இருக்கலாம் என கூறப்படுகிறது. உதாரணமாக, iPhone 15 இன் விலை ₹79,900 ஆக இருந்தபோது, பிரபல இ-காமர்ஸ் இணையதளங்களில் வழக்கமாக ₹70,000க்கு கீழ் கிடைக்கும் வகையில் இருந்ததது குறிப்பிடத்தக்கது.