இந்தியாவில் விற்பனையாகும் மொபைல்போன்களில் மிகவும் முக்கியமான ஒன்று ஐபோன். ஐபோன் நிறுவனத்தின் மொபைல்போன்கள் அதிக விலையில் இருந்தாலும் அதற்கு என தனியாக பல வாடிக்கையாளர்கள் உள்ளனர். ஐபோன் நிறுவனத்தின் அடுத்த மொபைல் போன் எப்போது வரும்? அதில் என்ன சிறப்பம்சங்கள் இருக்கும் என்று எதிர்பார்த்து காத்திருப்பார்கள். 


 


இந்நிலையில் ஐபோன் நிறுவனத்தின் 14 ப்ரோ மொபைல்போன் விரைவில் சந்தைக்கு வர உள்ளது. இந்த மொபைல் போன் வரும் அக்டோபர் 31ஆம் தேதி சந்தைக்கு விற்பனை வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தச் சூழலில் ஐபோன் 14 ப்ரோ மாடலில் உள்ள முக்கியமான சிறப்பு அம்சங்கள் என்னென்ன? இது தொடர்பாக சில தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி 


 


ஐபோன் 14 ப்ரோவின் முன்பக்கம்:


ஐபோன் 14 ப்ரோ மொபைல் போனின் முன்பக்கத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. அதாவது அந்தப் போனின் முன் பக்கத்தில் உள்ள கேமரா மற்றும் ஃபேஸ் ஐடி சென்சார் நல்ல டிசைனாக அமைக்கப்பட்டுள்ளது. இது சற்று அகலமாக இருக்கும் என்று கருதப்படுகிறது. 


 


ஐபோன் 14 ப்ரோவில் ஆள்வேஸ் ஆன் டிஸ்பிளே:


ஐபோன் 14 ப்ரோ மாடல் போன்களில் ஆள்வேஸ் ஆன் டிஸ்பிளே(Always on Display) மோட் முதல் முறையாக வர உள்ளது. ஐபோன் 14 ப்ரோ மாடல் டிஸ்பிளே 6.7 இன்ச்-ஆக இடம்பெற உள்ளது. மேலும் இது ஓஎல்.இ.டி டிஸ்பிளே தரம் கொண்டதாக அமைந்துள்ளது. 




ஐபோன் 14 ப்ரோவின் கேமரா:


ஐபோன் 14 ப்ரோ மாடலில் கேமராவை சற்று மாற்றியமைக்க ஆப்பிள் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அதன்படி 14 ப்ரோ மாடலில் 48 எம்பி மெயின் கேமரா சென்சார் இடம்பெறுள்ளது. அத்துடன் 57 சதவிகிதம் அதிகமான ஹெச்.டி சென்சாரும் இதில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த மாடலில் முன் கேமரா 12 எம்பி சென்சார் உடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.


 


பெரிய பேட்டரி:


ஐபோன் 13 மாடலில் 3095 mAh பேட்டரி இடம்பெற்றுள்ளது. ஐபோன் 13 ப்ரோ மாடலில் 4352 mAh பேட்டரி இடம்பெற்றுள்ளது. ஆனால் ஐபோன் 14 ப்ரோவில் 4323 mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. இத்துடன் 20 வாட் சக்தி கொண்ட வேகமான சார்ஜிங் வசதியும் இதில் அளிக்கப்பட்டுள்ளது. 


ஐபோன் 14 ப்ரோவின் விலை:


ஐபோன் 14 ப்ரோவின் விலை சரியாக இதுவரை தெரியவில்லை. எனினும் இதன் ஆரம்ப விலை 80,900 ரூபாயாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. மேலும் ஐபோன் 14 ப்ரோவில் அனைத்து மாடல்களும் 6 ஜிபி ரேம் உடன் வரும் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. 




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண