iPhone 15 Price Discount: ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 16 சில வாரங்களில் விற்பனைக்கு வரவுள்ள நிலையில், மிகப்பெரிய தள்ளுபடியில் iPhone 15 விற்பனைக்கு வந்துள்ளது.


ஐபோன் 15 PRO MAX


ஆப்பிள் நிறுவனத்தின் iPhone 16 மொபைல் போனானாது விரைவில் விற்பனைக்கு வரவுள்ளது. இது iPhone 15 மொபைல் போன் வெளியிடப்பட்டு கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்குப் பிறகு விற்பனைக்கு வரவுள்ளது. புதிய மாடல் iPhone 16 ன் தொலைபேசியானது , எப்பொழுது விற்பனைக்கு வரும் என்று, இன்னும் உறுதிப்படுத்தவில்லை. ஆனால், 16 குறித்து பலவிதமாக தகவல்கள் வருவதை சமூக வலைதளங்கள் வருவதை பார்க்க முடிகிறது. இந்த தருணத்தில் ஐபோன் 15, மீண்டும் கவனத்தை ஈர்த்துள்ளது.


அம்பானி குழுமத்தின் நிறுவனமாக ரிலையன்ஸ் டிஜிட்டல் நிறுவனமானது, ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் மொபைலை தள்ளுபடி விலையில் விற்பனை செய்வதாக அறிவித்துள்ளது. தற்போது, ​​ரிலையன்ஸ்-டிஜிட்டலில் ஐபோன் 15 இன் 256GB மொபைலானது ரூ. 1,37,990 க்கு தள்ளுபடி விலையில் விற்பனை செய்யப்படுகிறது, இதன் அசல் விலையானது ரூ.1,54,000 ஆகும். ஆகையால் ரூ.16,010-க்கு விலைக் குறைப்பானது செய்யபட்டுள்ளது.


மேலும் விலை குறைப்பு.?


ஐசிஐசிஐ வங்கி கிரெடிட் கார்டுடன் ரூ,5000 உடனடி தள்ளுபடி செய்யப்படுகிறது.


HDFC கிரெடிட் கார்டு மூலம் 5% தள்ளுபடியில், அதிகபட்சமாக ரூ.3500 வரை அளிக்கப்படுகிறது.


HSBC கிரெடிட் கார்டு 7.5% தள்ளுபடி செய்யப்படுகிறது.


 ஐபோன் 15 மொபைலை வாங்க ஆர்வமுள்ளவர்கள் விரைவாகச், இந்த தள்ளுபடி சலுகையை பயன்படுத்தி விற்பனைக் காலம் முடிவதற்குள் பய்ன்படுத்திக் கொள்ளவும்.  




Also Read; Budget Smartphones:ரூ.10,000 விலைக்கு 5G ஃபோன் வாங்கணுமா? எது சிறந்தது? விவரம் இதோ!


ஐபோன் 16 அம்சங்கள்?


ஐபோன் 16 மொபைலை பொறுத்தவரை சற்று பெரிய பேட்டரி, புதிய சிப்செட் மற்றும் சிறிய வடிவமைப்பு மேம்பாடுகள் உள்ளிட்ட சாதாரண மேம்படுத்தல்களை மட்டுமே காணக்கூடும் என்று வதந்திகள் கூறுகின்றன. புதிய மாடல்கள் அதிக விலையில் வரும் என்று எதிர்பார்க்கப்படுவதால், வாங்கும் முடிவை எடுப்பதற்கு முன், ஐபோன் 16 சீரிஸில் என்ன மேம்படுத்தப்பட்ட பயன்பாடுகள் என்பதைப் தெரிந்துகொள்ள வாடிக்கையாளர்கள் காத்திருக்க வேண்டும். 


Also Read: Sunita Williams: சுனிதா வில்லியம்ஸ் இல்லாமல் பூமிக்கு திரும்பிய விண்கலம்: பாதுகாப்பாக தரையிறங்கியதா?