ஆப்பிள் நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் , தனது புதிய படைப்புகளை அறிமுகப்படுத்துவது வழக்கம்.


அந்த வகையில் கடந்த செப்டம்பர் மாதம்  நடைப்பெற்ற 'ஃபார் அவுட்' நிகழ்வில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஐபோன் 14 மாடல்களை காட்சிப்படுத்தியது.  அதாவது Phone 14, iPhone 14 Plus, iPhone 14 Pro மற்றும் iPhone 14 Pro Max. என்னும் வகையில் அறிமுகமாகியுள்ள மொபைல்போன்களில் ஐபோன் 14 மற்றும் ஐபோன் 14 ப்ரோ சிறிய திரை கொண்ட மாடல்களாக இருக்கின்றன. ஆனால், ஐபோன் 14 பிளஸ் மற்றும் ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ் ஆகியவை பெரிய திரைகளை விரும்புவோரை இலக்காகக் கொண்டவை. கூடுதலாக ஐபோன் ப்ரோ மூலம் மீண்டும் ஆப்பிள் லிமிட்டட் மாடலான iPhone X இன் டிசைனை கொண்டுள்ளது.


கடந்த முறை இல்லாத புதிய மாடலான ஐபோன் 14 பிளஸ் பயனாளர்களை வெகுவாக கவரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது அதன் விற்பனை கனிசமாக குறையும் என சமீபத்திய ஆய்வறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது. DigiTimes இன் அறிக்கையின் அடிப்படையில்  iPhone 14 மற்றும் iPhone 14 Plus விற்பனையானது iPhone 14 Pro மற்றும் iPhone 14 Pro Max  ஆகியவற்றிற்கு கிடைத்த வரவேற்பால் முடங்கியதாக கூறப்படுகிறது. இந்த ஆண்டு ப்ரோ மற்றும் புரோ அல்லாத ஐபோன் மாடல்களுக்கு இடையேயான விற்பனை செயல்திறனில் வேறுபாடுகள் இருந்தபோதிலும் மொத்த ஐபோன் 14 மாடல்களின்  ஏற்றுமதி 2021 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் ஐபோன் 13 வரிசைக்கு இணையாக இருக்கும் என அந்த அறிக்கை கூறுகிறது.




ஐபோன் 14 மற்றும் ஐபோன் 14 பிளஸ் விற்பனை விரைவில் சமநிலையாக இருந்தால் , அக்டோபர்  இரண்டாம் பாதியில்  ஆப்பிள் தனது ஐபோன் சாதனங்களை தயாரிப்பதற்கான பாகங்களை ஆடர் செய்வதை குறைக்கலாம் என்று அறிக்கை கூறுகிறது. அப்படி அதிக அளவு ஆடர்களை குறைத்தால் ஆண்டின் இறுதிக்குள் மொத்த ஐபோன் 14 வரிசை ஏற்றுமதிகள் கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தில் ஐபோன் 13 தொடருடன் ஒப்பிடும்போது குறையக்கூடும் என அறிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.




ஐபோன் 14 மற்றும் ஐபோன் 14 பிளஸ் வசதிகள் :


இது 6.1-இன்ச் சூப்பர் ரெடினா XDR OLED டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது, இது கடந்த ஆண்டின் ஐபோன் 13 உடன் ஒப்பிடும் போது பிரகாசம் மற்றும் வண்ண இனப்பெருக்கம் இரண்டுமே அதிகம். உச்ச பிரகாசத்தை  1200நிட்ஸ்  வழங்கும் என்றும் டால்பி விஷனை ஆதரிக்கும் என்றும் கூறப்படுகிறது.ஐபோன் 14 ஆனது கடந்த ஆண்டு ஆப்பிளின் தனியுரிம A15 பயோனிக் SoC ஐப் பெறுகிறது.ஒவ்வொரு மாடலின் ரேம் மற்றும் பேட்டரி திறன்களை ஆப்பிள் அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை.


கேமராவைப் பொறுத்த வரையில், iPhone 14 ஆனது 1.9um சென்சார் மற்றும் f/1.7 aperture aperture லென்ஸை இணைக்கும் 12-மெகாபிக்சல் வைட்-ஆங்கிள் கேமராவைப் பெறுகிறது. 120-டிகிரி ஃபீல்ட்-ஆஃப்-வியூ உடன் f/2.4 அபெர்ச்சர் அல்ட்ரா-வைட் ஆங்கிள் லென்ஸுடன் 12-மெகாபிக்சல் சென்சார் இணைக்கப்பட்டுள்ளது. F/1.9 துளை லென்ஸுடன் புதிய 12 மெகாபிக்சல் முன் TrueDepth கேமரா இருப்பதாக ஆப்பிள் கூறுகிறது.ஆக்‌ஷன் மோட் எனப்படும் புதிய ஸ்டெபிலைசேஷன் அம்சத்துடன் மேம்படுத்தப்பட்ட வீடியோ ரெக்கார்டிங்கை செய்ய முடியும்.சினிமா மோட் இப்போது 4K இல் 30fps மற்றும் 4K இல் 24fps இல் கிடைக்கிறதுமேம்படுத்தப்பட்ட ட்ரூ டோன் ஃபிளாஷ் உள்ளது, இது 10 சதவீதம் பிரைட்னஸை தரும் என்கிறது ஆப்பிள்.



திரை அளவு மற்றும் பேட்டரி திறன் இரண்டையும் தவிர மற்ற அனைத்து வசதிகளுமே  பிளஸ் மாடலில் , ஐபோன் 14 ஐ போலவே உள்ளது. 6.7-இன்ச் சூப்பர் ரெடினா எக்ஸ்டிஆர் ஓஎல்இடி டிஸ்ப்ளேவைப் பெறுகிறது மற்றும் ஐபோன் 14 பிளஸ் ஐபோனில் எப்போதும் சிறந்த பேட்டரி ஆயுளைக் கொண்டிருக்கிறது.