உலகம் முழுவது நாளை காதலர் தினம் கொண்டாடப்பட உள்ள சூழலில், இந்திய சந்தையில் ஆப்பிள் ஐபோனின் விலை குறைக்கப்பட்டுள்ளது.


ஐபோன் 14 சீரிஸ்:


Apple நிறுவனம் கடந்த ஆண்டு ஐபோன் 14 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை சர்வதேச சந்தையில் அறிமுகப்படுத்தியது. இந்த ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் சீரிஸ், கடந்தாண்டு செப்டம்பர் மாதம் முதல் இந்திய சந்தையில் கிடைக்கப் பெறுகிறது. இதன் ஆரம்ப விலை ரூ.79,990. iPhone 14, iPhone 14 Plus, iPhone 14 Pro மற்றும் iPhone 14 Pro Max என, ஐபோன் 14 சீரிஸில் நான்கு ஸ்மார்ட்போன்கள் உள்ளன. அவற்றில் மிகவும் மலிவு மாடல்களில் ஒன்றான ஐபோன் 14 பிளஸின் சில்லறை விலை ரூ. 89,900 என்றாலும், காதலர் தினத்தை முன்னிட்டு ரூ.46,900க்கு வாங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


விலை குறைப்பு:


ஆப்பிளின் மூன்றாம் தரப்பு அங்கீகரிக்கப்பட்ட சில்லறை விற்பனையாளரான iVenus, iPhone 14 மாடல்களுக்கு சில சிறந்த சலுகைகளை அறிவித்துள்ளது. ஐபோன் 14 பிளஸ் விற்பனை பற்றி குறிப்பிடுகையில், இந்த ஸ்மார்ட்போன் நிகர பயனுள்ள விலை ரூ 46,990-க்கு வாங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சலுகையின் ஒரு பகுதியாக, விற்பனையாளர் 9,000 ரூபாய் உடனடி தள்ளுபடியை வழங்குகிறார். இதனுடன், HDFC வங்கி டெபிட் அல்லது கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்தினால் 4,000 ரூபாயை உடனடி கேஷ்பேக் ஆக பெறலாம். பின்னர் நீங்கள் ரூ.22,000 வரையிலான எக்ஸ்சேஞ்ச் மதிப்பு மற்றும் ரூ.8,000 எக்ஸ்சேஞ்ச் போனஸையும் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சலுகையை பயன்படுத்துவதன் மூலம், ஐபோன் 14 பிளஸ் மாடலை ரூ.46,990-க்கும், ஐபோன் 14 மாடலை ரூ.37,900-க்கும் பெறலாம். 


ஐபோன் 13-க்கு சலுகை:


இமேஜின் விற்பனை தளங்களில் ஐபோன் 13 128 ஜிபி வேரியண்ட்டை ரூ.60,900-க்கும்,  256 ஜிபி வேரியண்ட்டை ரூ.70,900க்கும் வாங்கலாம். ஐபோன் 13 மாடலுக்கு இமேஜின் விற்பனை தளத்திடமிருந்து ரூ.7,000 உடனடி தள்ளுபடியைப் வழங்கப்படுகிறது. அதே சமயம் HDFC வங்கி கேஷ்பேக் சலுகை ரூ. 2000 வழங்குவதால், ஐபோன் 13-ஐ ரூ. 60,900-க்கு வாங்கலாம்.


மற்ற சாதனங்களுக்கும் சலுகை:


இமேஜின் ஸ்டோர்ஸ் மேக்புக் ஏர், ப்ரோ, வாட்ச் சீரிஸ் 8 மற்றும் எஸ்இ 2 மற்றும் ஏர்போட்ஸ் ப்ரோ உள்ளிட்ட பிற ஆப்பிள் சாதனங்களுக்கும் தள்ளுபடி அறிவித்துள்ளது. அதன்படி,  இமேஜின் ஸ்டோர்களில் அனைத்து ஏர்போட்களுக்கும் ரூ.900 உடனடி தள்ளுபடி ஆகவும், HDFC வங்கியின் கேஷ்பேக் ஆக ரூ.2,500 வரையும் வழங்கப்படுகிறது. திட்டத்தின் கீழ் AirPods ப்ரோவை 23,500 ரூபாய்க்கும், அதே சமயம் AirPods (2nd Gen) 12,500 ரூபாய்க்கு வாங்கலாம். இதன் மூலம் காதலர் தினத்திற்கு தனது பார்ட்னருக்கு பரிசு வழங்க நினைப்பவர்கள், ஐபோன் போன்ற தரமான ஆப்பிள் சாதனங்களை வாங்கி கொடுத்து அசத்தலாம்.