உலகின் மிகவும் பிரபலமான மொபைல் இயங்குதளமாக ஆண்ட்ராய்டு திகழ்கிறது. இதன் ஆண்ட்ராய்டு 13 வெர்ஷனின் இரண்டாவது பீட்டா பதிப்பு கூடுதல் அம்சங்கள் மற்றும் பாதுகாப்பு மேம்பாடுகளுடன் வருகிறது. இது செயல் திறன் மற்றும் ப்ரைவசி ஆகியவற்றை அதிகரிக்கும் பல அம்சங்களைக் கொண்டுள்ளது. இந்த பதிப்பின் பீட்டா வெர்ஷன் தற்போது வெளியாகி உள்ளது. அதன் மூலம் ஆண்ட்ராய்டு 13இல் உள்ள சிறப்பம்சங்களை அறிந்து கொள்வோம்.


என்னென்ன புதுமைகள்?


டிவைசின் ஐகான்களுக்கு தீம் செட் செய்துகொள்ளக்கூடிய புதிய வசதி கிடைக்கிறது. மேலும் இந்த புதிய OS ஆனது ஆங்கிலம் அல்லாமல் வேறு மொழி பயன்படுத்தும் பயனர்களுக்கு சிறந்த வசதிகள் பல கொண்டுவருகிறது. இது ஆண்டிராய்டு பயனர்களின் ஒட்டுமொத்த அனுபவத்தை மேம்படுத்தும் வகையில் LE ஆடியோ, MIDI 2.0 யுஎஸ்பி ஆகியவை கொண்டுள்ளது.



பீட்டா 3


ஆண்ட்ராய்டு 13 OS பீட்டா வெர்ஷனாக பிக்சல் ஃபோன்களுக்கு வெளியிடப்படுவதற்கு முன்பு அதன் இறுதி வடிவத்திற்கு வந்துள்ளது. அதைத் தொடர்ந்து பிற ஆண்ட்ராய்டு சாதனங்களுக்கு இது மேம்படுத்தப்படும். வலைதள பக்கத்தில், கூகிள் இதை உறுதிப்படுத்தி உள்ளது. இறுதி மெருகூட்டல் கட்டத்திற்கு மாறப்போவது குறித்தும் அதில் கூறியுள்ளானர். 


தொடர்புடைய செய்திகள் : June Month Rasi Palan: ஜூன் மாதம் எந்த ராசிக்கு அமோகம்...! எந்த ராசிக்கு அவஸ்தை..! முழு ராசிபலன்கள்...!


ஆண்டராய்டு அறிக்கை


அந்த அறிக்கையில், “இன்று ஆண்ட்ராய்டு 13 இன் மூன்றாவது பீட்டா வெர்ஷனை வெளியிடுகிறோம், இந்த பிராசசின் இறுதி கட்டத்திற்கு செல்கிறோம், இதன்மூலம் நாங்கள் ஆண்ட்ராய்டு 13 ஐ மேலும் மெருகூட்டவும், செயல்திறனை மேம்படுத்தவும் கவனம் செலுத்துகிறோம். ஆண்ட்ராய்டு 13, ப்ரைவசி மற்றும் பாதுகாப்பு, டெவலப்பர் உற்பத்தித்திறன் மற்றும் டேப்லெட், பெரிய திரை போன்ற எங்கள் முக்கிய கருப்பொருள்களை நாங்கள் உருவாக்கியுள்ளோம்." என்று தெரிவித்துள்ளனர்.



பீட்டா 4


இந்த வெர்ஷனுக்கு பிறகு அடுத்தது நேரடியாக இறுதி வெர்ஷனாக அனைவருக்கும் கிடைக்கும்படி செய்யாமல் ஆண்ட்ராய்டு 13 இன் பீட்டா வெர்ஷன் நான்கு வெளியாகும் என்று கூறப்படுகிறது. அதன் பிறகே இறுதி வெளியீடு இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த பீட்டா அப்டேட் ஜூலையில் வர உள்ளது குறிப்பிடத்தக்கது. பீட்டா 3 மற்றும் பீட்டா 4 க்கு இடையில், OS இன் செயல்பாடுகளைச் செம்மைப்படுத்துவதில் கூகுள் வேலை செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் பயனர்களுக்குத் தொந்தரவு தரக்கூடிய சிறிய சிறிய பிழைகளை நீக்க முயற்சிக்கிறது.


இறுதி வடிவம் எப்போது?


கூகுள் கூற்று படி, இறுதி பதிப்பு ஆகஸ்ட் மாதம் வெளியாகும் என்று தெரிகிறது. எனவே, கூகுளின் டெவலப்மென்ட் குழுவிற்கு டெட்லைன் கொடுக்கப்பட்டு உள்ளது. ஆண்ட்ராய்டு 13 அதன் இறுதி வடிவத்தில் என்ன கொண்டு வருகிறது என்பதைப் பார்ப்பதற்கு டெக் ஆர்வலர்கள் காத்திருக்கின்றனர்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர.


யூடியூபில் வீடியோக்களை காண.