மைக்ரோமேக்ஸ் இன் நோட் 2 ஜனவரி 25 அன்று அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக நிறுவனம் ட்விட்டரில் பதிவிட்டுள்ளது. நிறுவனம் இட்டுள்ள டுவீட் மூலம் மாடலின் பெயர் வடிவமைப்பு, வண்ணங்கள் மற்றும் வெளியீட்டு தேதியை உறுதி செய்திருக்கிறது. மைக்ரோமேக்ஸ் இன் நோட் 2 பிளிப்கார்ட்டில் வெளியாகும் என்றும் தெரிவிக்கப்படுகிறது. இருப்பினும் தற்போது வரை நிறுவனம் இதன் விற்பனை விவரங்களை பகிர்ந்து கொள்ளவில்லை. கிடைத்துள்ள தகவல்களின்படி இந்த மொபைல் போன் ரூ.15000 என்ற விலைப்பிரிவில் இருக்கும் என கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் தற்போது வரை வரவில்லை. மைக்ரோமேக்ஸ் இன் நோட் 2 என்னென்ன ஸ்பெசிபிகேஷன்ஸ் உடன் வருகிறது என்பதை விரிவாக பார்க்கலாம்.
இந்த மொபைல் சாதனம் 30W ஃபாஸ்ட் சார்ஜிங்குடன் வருகிறது என்பதையும் இதன் ப்ராஸஸர் மீடியா டேக் ஹீலியோ ஜி95 என்பதையும் இரு வேறு ட்விட்டர் பதிவுகள் மூலம் உறுதிபடுத்தப்பட்டுள்ளது. மைக்ரோமேக்ஸ் இன் நோட் 2 "க்ளாஸ் ஃபினிஷ்" வடிமைப்போடு வரும் எனத் தகவல்கள் தெரிவிக்கிறது. இது உண்மையான கண்ணாடி பேனலாக இருக்குமா அல்லது கண்ணாடி போன்ற தோற்றத்தை தரும் பிளாஸ்டிக் பேனலாக இருக்குமா என்ற தகவல்கள் தெளிவாக தெரியவில்லை. இதன் கலர் வேரியன்ட்களை பொறுத்த வரையில், இது ப்ளூ மறறும் பழுப்பு நிற ஆப்ஷன்களுடன் வரும் எனவும் இது பின்புறத்தில் குவாட் கேமரா வடிவமைப்போடு வரும் எனவும் கூறப்படுகிறது.
மைக்ரோமேக்ஸ் இன் நோட் 2 இன் மொபைல் குறித்த வேறெந்த விவரங்களை நிறுவனம் அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை. இதுவரை வெளியான உத்தேச தகவல்களை வைத்து பார்க்கும்போது, இந்த ஸ்மார்ட்போனானது 6.43 இன்ச் அமோலெட் டிஸ்ப்ளே உடன் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மொபைல் 48 மேகாபிக்சல் கேமராவுடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் ஒரு 5 மேகாபிக்சல் கேமராவுக்கு இரண்டு 2 மேகாபிக்சல் கேமராவும் சேர்ந்து க்வாட் கோர் கேமராவாக வரும் என்று தெரிகிறது.
இந்த மொபைல் 6GB மற்றும் 8GB ரேம் கொண்ட இரு மாடல்களில் வருகின்றன. அதில் 64GB மற்றும் 128GB என்ற வேரியன்ட்கள் உள்ளன. இந்த மொபைலில் 5000mAh பேட்டரி வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன. அத்துடன் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் சைட் மவுண்டடாக வருகிறது. மைக்ரோமேக்ஸ் இன் நோட் 2 முன்னோடியான மைக்ரோமேக்ஸ் இன் நோட் 1 டிவைஸ் வடிவமைப்பு குறித்து பார்க்கையில், இது 6.67 இன்ச் முழு எச்டி ப்ளஸ் ஐபிஎஸ் டிஸ்ப்ளே வசதியோடு மீடியோ ஹீலியோ ஜி85 ப்ராசசர் மூலம் இயக்கப்படும் எனவும் இது 4 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வசதியோடு இயக்கப்படுகிறது. அதேபோல் மைக்ரோமேக்ஸ் இன் 2பி விலை அதிகரித்து சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.
மைக்ரோமேக்ஸ் இன் 2B விலை அதிகரித்த நிலையில், மைக்ரோமேக்ஸ் நிறுவனம் தங்களது அனைத்து ஸ்மார்ட்போனின் விலையையும் தற்போது ரூ. 500 உயர்த்தியுள்ளது. மைக்ரோமேக்ஸ் இந்தியாவில் ஸ்மார்ட்போனின் இரண்டு வகைகளை வழங்குகிறது மற்றும் அவை இரண்டும் விலை உயர்வைப் பெற்றுள்ளன. 4 ஜிபி+64 ஜிபி கொண்ட மொபைல் இப்போது ரூ .8,499 விலையிலும், 6 ஜிபி+64 ஜிபி கொண்ட மற்றொரு மாடல் ரூ. 9,499 விலைக்கும் கிடைக்கிறது. மைக்ரோமேக்ஸ் இன் நோட் 1 ப்ரோ மொபைலின் உத்தேச ஸ்பெசிபிகேஷன்களும் இணையத்தில் வெளியாகியுள்ளது. கிடைத்த தகவல்களின்படி, இந்த டிவைஸ் மீடியாடெக் ஹீலியோ ஜி 90 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது.