எம்.ஜி நிறுவனம் தனது MG Cyberster Concept எலக்ட்ரிக் காரினை ஷாங்காய் ஆட்டோ ஷோவில் தற்போது வெளியிட்டுள்ளது. சைபர்ஸ்டெர் கான்செப்ட் கார் எம்.ஜி நிறுவனத்தின் புதிய எலக்ட்ரிக் கார் என்பது குறிப்பிடத்தக்கது. 1962ம் ஆண்டு வெளியான எம்.ஜி எம்.ஜி.பி என்ற கிளாசிக் விண்ட்டேஜ் காரின் சில அமசங்கள் இந்த புதிய சைபர்ஸ்டெரில் இணைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 1920களில் பிரிட்டிஷ் நாட்டை தலைமையமாக கொண்டு உருவான இந்த நிறுவனம் பல கான்செப்ட் கார்களை உருவாகியுள்ளது.

  




இந்நிலையில் ஷாங்காயில் நடந்த ஒரு ஆட்டோ ஷோவில் தற்போது இந்த கார் வெளியிடப்பட்டுள்ளது. பலரும் எதிர்பார்த்த அந்த கேமிங் ஸ்டைலில் அமையப்பெற்ற ஸ்டேரிங் வீல்கள் காண்போரை கவர்கின்றது. மேலும் கேமிங் கன்சோல் முறையில் கேமிங் காக்பிட் பொருத்தப்பட்ட உலகின் முதல் சூப்பர் கார் இதுவென்பது குறிப்பிடத்தக்கது. 




இந்த கார் ஒருமுறை சார்ஜ் செய்யப்பட்டால் சுமார் 500 மயில்கள் வரை செல்லும் என்றும் 0 - 100 கிலோமீட்டர் வேகத்தை எட்ட இதற்கு 3 வினாடிகள் தேவைப்படும் என்றும் கூறப்படுகிறது. மேலும் இந்த கார் குறித்த ஸ்பெசிபிகேஷன்ஸ் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.