இந்தியாவில் புத்தாண்டிலிருந்து பல்வேறு அதிரடியான மாற்றங்கள் அமலுக்கு வருகின்றன. இந்த மாற்றங்கள் அனைத்துமே நம்முடைய அன்றாட வாழ்க்கையிலும் குறிப்பாக வங்கி சார்ந்த பரிவர்த்தனைகள் உள்ளிட்டவற்றில் எல்லாம் பெரிய அளவிலான மாற்றத்தை ஏற்படுத்தப் போகின்றன. எனவே இந்த மாற்றங்களை தெரிந்து வைத்துக் கொண்டு அதற்கு ஏற்ப நம்முடைய நிதிகளை திட்டமிடுவது மிகச் சிறந்ததாக இருக்கும்.

Continues below advertisement

வங்கி கணக்கு

வங்கி கணக்கு இல்லாதவர்களே இல்லை என கூறலாம். வங்கிகளில் கணக்கு வைத்திருப்பவர்கள் 2026 ஆம் ஆண்டிலிருந்து ஆண்டுக்கு ஒருமுறை KYC அப்டேட் செய்வது கட்டாயமாகிறது. வங்கி கணக்குகள் தொடர்ந்து செயல்பாட்டில் இருக்க வேண்டும் , வங்கி கணக்குகள் மூலம் உங்களுக்கு கிடைக்கக்கூடிய பரிவர்த்தனைகள் தொடர்ந்து கிடைக்க வேண்டும், டிஜிட்டல் பரிவர்த்தனைகளை தொடர்ந்து பயன்படுத்த வேண்டும் என்றால் உங்களுடைய வங்கி கணக்கில் KYC அப்டேட் செய்து வைப்பது கட்டாயமாகும். ஒருவேளை நீங்கள் KYC அப்டேட் செய்ய தவறினால் உங்களுடைய வங்கி கணக்கு முடக்கப்படலாம் .

Continues below advertisement

PF கணக்கு

இந்தியாவில் வேலைக்கு செல்லக்கூடிய லட்சக்கணக்கானவர்களுக்கு ஒரு சமூக பாதுகாப்பு திட்டமாக EPFO திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. PF கணக்கில் நம்முடைய பெயரில் வரவு வைக்கப்படும் பணத்தை ஒரு அவசர தேவைக்கு நாம் எடுத்து பயன்படுத்திக் கொள்ளலாம். இதுநாள் வரை நாம் இணையதளம் மூலமாக விண்ணப்பம் செய்து அதற்கு PF அதிகாரிகள் அனுமதி தந்த பிறகுதான் பணம் கைக்கு வரும். இந்த நடைமுறைகளுக்கு 15 நாட்களாவது தேவைப்படும் . ஆனால் 2026 ஆம் ஆண்டு முதல் நம்முடைய BF கணக்கில் இருக்கும் பணத்தை ATM வாயிலாகவே நாம் எளிதாக எடுத்து பயன்படுத்த முடியும்.

அரசு சேவைகளுக்கு ஒரே தளம்

மத்திய அரசு பொது மக்களின் நலனுக்காக பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. பெரும்பாலான மக்களுக்கு இந்த நலத்திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு இல்லாததால் அவற்றை பயன்படுத்தாமல் இருந்து வருகின்றனர் . இந்த நிலையில் தான் மத்திய அரசு அனைத்து அரசு திட்டங்களும் ஒருங்கிணைந்த ஒரு தளத்தை விரைவில் அறிமுகம் செய்யப் போகிறது. இந்த இணையதளம் நடைமுறைக்கு வந்து விட்டால் ஒரு நபர் தனக்கு என்னென்ன அரசு நலத்திட்டங்கள் கிடைக்கின்றன அவற்றுக்கு எப்படி விண்ணப்பம் செய்வது என்பது உள்ளிட்ட தகவல்களை எல்லாம் இந்த ஒரு இடத்திலேயே தெரிந்து கொள்ள முடியும். 2026 ஆம் ஆண்டு பொருத்தவரை தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப பல்வேறு மாற்றங்களும் நடைமுறைக்கு வரக்கூடிய ஒரு ஆண்டாக நிச்சயம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.