Continues below advertisement

தமிழகத்தில் மதுபான விற்பனை

நாளுக்கு நாள் மதுபான விற்பனை உச்சத்தை தொட்டுள்ளது. நவ நாகரீக காலத்தில் மதுபானம் குடிப்பது பேஷனாகவே மாறிவிட்டது. இதனால் ஐடி நிறுவனத்தில் பணியாற்றுபவர்களில் ஆண்கள், பெண்கள் என வித்தியாசம் பார்க்காமல் மதுகுடிப்போர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இரவு பார்ட்டி, வார இறுதி பார்ட்டியில் கையில் மதுகோப்பையோடு ஆண்களுக்கு போட்டியாக பெண்களும் களத்தில் இறங்கியுள்ளனர். அதே நேரம் மதுபானம் விற்பனை மூலம் தமிழக அரசுக்கு வருமானம் கொட்டோ கொட்டு என கொட்டுகிறது. தீபாவளி, பொங்கல், புத்தாண்டு என விஷேச நாட்களில் ரஜினி, விஜய், அஜித் படங்களுக்கு நிகராக பல நூறு கோடிகளில் பணம் குவியும்.

டாஸ்மாக்கில் மதுபானம் இருப்பு

தமிழகம் முழுவதும் நாள் ஒன்றுக்கு ரூ. 100 முதல் 120 கோடிக்கு மது விற்பனையாகும். அதுவே புத்தாண்டில் ரூ.200 கோடியை வரை மது விற்பனை நடைபெறும். அந்த வகையில இந்தாண்டும் புத்தாண்டையொட்டி இன்று (டிசம்பர் 31) மற்றும் நாளை (ஜனவரி 1) மது விற்பனை களைகட்டும் என டாஸ்மாக நிர்வாகம் எதிர்பார்த்து காத்துள்ளது. இதற்காக குடிமகன்களை கவரும் வகையில் புதுவகையாக மதுபானங்களையும், குறைந்த விலையில் உள்ள மதுபானங்களையும் இருப்பு வைக்க உத்தரவிட்டுள்ளது. அதிலும் தற்போது தமிழகத்தில் குளிர் அதிகமாக இருப்பதால் பிராந்தி, விஸ்கி, ரம் வகைகள் அதிகளவில் விற்பனையாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

Continues below advertisement

புத்தாண்டில் மது விற்பனைக்கு இலக்கு

அந்த வகையில் புத்தாண்டு கொண்டாட்டம் இன்று இரவு 12 மணிக்களு களைகட்டவுள்ளது. எனவே தற்போதே டாஸ்மாக் மற்றும் பார்களில் மதுப்பிரியர்கள் குவிந்து வருகிறார்கள். எனவே டாஸ்மாக் கடைகளில் அதிகளவு மது இருப்பை உறுதி செய்யும் படியும், மதுப்பிரியர்கள் கேட்கும் மதுபானங்களை கொடுக்கும் வகையில் ஸ்டாக் வைத்திருக்கும் படி டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. மேலும் நாளை புத்தாண்டு பண்டிகை தினத்திலும் மது விற்பனை அதிகரிக்கும் என்பதாலும் அடுத்த 10 நாட்களில் பொங்கல் பண்டிகை வருவதாலும் அதிகளவு ஸ்டாக் வைத்திருக்கும் படி டாஸ்மாக் மேலாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் புத்தாண்டையொட்டி இன்று இரவு அதிகளவு மதுப்பிரியர்கள் கூடுவார்கள் என்பதால் கூடுதல் பணியாளர்களை ஏற்பாடு செய்யப்படியும் டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது.