லேப்டாப் (Laptop), வரும் காலத்தில் ஸ்மாட்ஃபோன் போலவே, ஓர் அடிப்படையான ஒன்றாக மாறிவிடும் அளவிற்கு உள்ளது. அப்படி, எல்லா துறைகளிலும் லேப்டாட் பயன்பாடு அதிகரித்து வருகிறது. லேப்டாப் அவசியமானதாகவும் மாறிவிட்டது. பல எல்க்ட்ரானிக் நிறுவனங்கள் போட்டி போட்டுக்கொண்டு சந்தையில் லேப்டாப்களை விற்பனை செய்து வருகிறது. இந்நிலையில், எல்க்ட்ரானிக் பொருட்களுக்கு பெயர்பெற்ற, பிரபலமான நிறுவனமான எல்.ஜி. 2022 -ஆம் எடிசன் LG Gram லேப்டாப்களை அறிமுகம் செய்துள்ளது. ஸ்லீக் ஸ்லிம்மாக இருக்கும் எல்.கி. கிராம் லேப்டாகளின் சிறப்புகள் என்னென்ன என்று பார்ப்போம்.


LG Gram laptops 2022 edition:


LG Gram laptops 2022 எடிசன் 14-இன்ச், 16-இன்ச் மற்றும் 17-இன்ச் டிஸ்பிளே என மூன்று ரகங்களில் கிடைக்கிறது. எல்.ஜி. கிராம் லேப்டாப்கள், குறைந்த எடை, ஸ்லீக் தோற்றம் ஆகியவற்றிற்கு பெயர்போனது. பெரிய திரை, அல்டா லைட் என பல சிறப்பம்சங்கள் இந்த மாடலில் கிடைக்கும். 



இந்தப் புதிய எல்.ஜி. கிராம் மாடல் பயனர்களுக்கு அவர்களது பயன்பாட்டு திறனை மேம்படுத்துவிதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் facial recognition மற்றும் noise cancellation வசதிகள் இருக்கின்றன. இதில் கட்டிங் எட்ஜ் தொழில்நுட்பம் (“cutting-edge technology ) பயன்படுத்தப்பட்டுள்ளது.




 LG Gram சீரிஸ் லேப்டாப் விற்பனை வரும் 23 ஆம் தேதி அமேசன் பிரைம் டே சிறப்பு விற்பனை தொடங்கும் நாளில் ஆரம்பமாகிறது.


எல்.ஜி. கிராம் 17 (மாடல் 17Z90Q), LG Gram 16 (மாடல் 16Z90Q), LG Gram 16 (மாடல் 16T90Q- 2in1),  மற்றும் LG Gram 14 (மாடல் 14Z90Q) லேப்டாப்கள் விற்பனை வருகிறது. இதன் விலை குறித்து இன்னும் அதிகாரப்பூர்வ தகவல் கிடைக்கவில்லை. ஆனால், இதன் தொடக்க விலை ரூ. 94,999 ஆக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 


LG Gram சிறப்பம்சங்கள்:




எல்.ஜி. கிராம் லேப்டாப்கள், 12 ஜென்ரேசன் இண்டெல்  சாஃப்ட்வேர் தொழில்நுட்பத்தில், ஐ7 ப்ராசசர் உடன், LPDDR 5 RAM மற்றும் NVMe Gen 4 SSD உடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த லேப்டாப் ப்ராசசிங் வேகம் அதிகமாக இருக்கும். LG Gram மாடல் 17Z90Q மற்றும் 16Z90Q இரண்டிலும் 80 வாட் பேட்டரிகளுடன் அதிக நேரம் பயன்படுத்தும் திறனை கொண்டிருக்கிறது. 


LG Gram 17 மற்றும்16  டிஸ்பிளே ஸ்கிரீன் HD உடன்  WQXGA (2560x1600) அளவு கொண்டதாக இருக்கும். இதன் டிஸ்பிளே பணிகள் செய்யவும், பொழுதுப்போக்கிற்காக படங்கள் பார்ப்பதற்கு உள்ளிட்ட பலவற்றிக்கும் பயனுள்ளதாக இருக்கும். டிஸ்பிளேயில் விடீயோக்களின் நிறங்கள் மிகவும் துள்ளியமாக வழங்கும். 




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண