ஸ்மார்ட்போன் சந்தையிலிருந்து வெளியேறுவதாக எல்.ஜி நிறுவனம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில் “நஷ்டம் காரணமாக மொபைல் போன் தயாரிப்பை நிறுத்துவதாகவும், வளர்ச்சியுள்ள மற்ற தொழில்களில் தொடர்ந்து கவனம் செலுத்துவோம்” எனவும் கூறப்பட்டுள்ளது. அதே நேரத்தில் எல்.ஜி. மொபைல் வைத்துள்ள வாடிக்கையாளர்களுக்கு தேவையான உதவிகள் மற்றும் மென்பொருள் அப்டேட் ஆகியவை தொடர்ந்து வழங்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.




வரும் ஜூலை 31 ம் தேதியோடு மொத்தமாக மொபைல் தொடர்பான அனைத்து தொழிலும் நிறுத்தப்படுவதாக கூறியுள்ள எல்.ஜி. குறிப்பிட்ட சில மொபைல்களை மட்டும் தொடர்ந்து தயாரிப்போம் எனவும் கூறியுள்ளது.