Jio 5G Launch: தீபாவளி முதல் சென்னை உட்பட நான்கு நகரங்களில் ஜியோவில் 5G  அறிமுகம் செய்யப்படவுள்ளது என முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார். 2023ஆம் ஆண்டுக்குள் நாடு முழுவதும் 5G சேவை வெற்றிகரமாக நிறுவப்படும் எனவும் ரிலையன்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார். ஜியோ 5G சேவை முதல் கட்டமாக சென்னை, மும்பை, கொல்கத்தா மற்றும் டெல்லி என நான்கு நகரங்களில் தொடங்கப்படவுள்ளது.  

Continues below advertisement

மேலும், மொபைல் நெட்வொர்க்கில் ஜியோ 5G சேவை அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்பாகவே 5G சேவையின் அனுபவத்தை மக்கள் உணர்ந்து பயன்பெற ஜியோ எக்ஸ்பீரியன்ஸ் சென்டர்கள் மெட்ரோ நகரமான மும்பையில் திறக்கப்படவுள்ளதாக ரிலையன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

ரிலையன்ஸ் நிறுவனத்தின் 45வது ஆண்டு பொதுக்கூட்ட மாநாட்டில் இதுகுறித்து பேசிய ஜியோ இயக்குனர் கிரன் தாமஸ், “விரைவில் மெட்ரோ நகரமான மும்பை நகரத்தில் ஜியோ 5G எக்ஸ்பீரியன்ஸ் சென்டர்கள் திறக்கப்படவுள்ளதாகவும், அதில் ஜியோ 5Gயின் அனுபவத்தை மக்கள் நேரடியாக உணர்ந்து 5Gன் இன்டெர்நெட் வேகத்தினை பயன்படுத்த முடியும்” எனவும் கூறினார்.

Continues below advertisement

மேலும், இது ஜியோ 5G சேவை நாடு முழுவதும் அறிமுகமாவதற்கு முன்பே அதன் சேவையை உணரும் வாய்ப்பு எனவும் அனைவரும் ஜியோ 5G எக்ஸ்பீரியன்ஸ் சென்டர்களுக்கு வந்து ஜியோ 5G சேவையின் மேஜிக்கை அனுபவிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார். 

இந்த மாநாட்டில் இது குறித்து ரிலையன்ஸ் நிறுவனர் முகேஷ் அம்பானி பேசுகையில், “ஜியோ ஃபிக்ஸட் லைன் நெட்வொர்க் மூலம் 5G இணைய சேவை வழங்கப்படவுள்ளது. அதிக தரம் வாய்ந்த மற்றும்  தேவைக்கு அதிகமான, எல்லா நேரங்களிலும் பயன்படுத்தக்கூடிய ஃபைபர் ஆப்டிக் சேவையை வழங்குவதே எங்கள் ரிலையன்ஸ் நிறுவனத்தின் குறிக்கோள் எனவும் பேசியுள்ளார்.  இந்தியாவின் எல்லா மூலைகளில் இருந்தும், அதாவது குக்கிராமங்கள் முதல் பெரு நகரங்கள் வரை   டேட்டாவை கடத்தி செல்வதும் அதை மற்ற நாடுகளுடன் இணைப்பதும் தான் 5G அலைக்கற்றை செய்யக்கூடிய வேலை. ஜியோவின் இந்த அகில இந்திய ஃபைபர் ஆப்டிக் நெட்வொர்க்கின் நீளம் 11 லட்சம் கிலோ மீட்டர் ஆகும், இது உலகத்தின் சுற்றளவை விட 27 மடங்கு அதிகம்.” எனவும் கூறினார்.

மேலும், ஜியோ ஃபைபர் தான் இந்தியாவின் முதன்மையான எஃப்.டி.டி.எக்ஸ் இன்டெர்நெட் சேவையை வழங்கி வருகிறது எனவும் கூறினார். மேலும் இரண்டு ஆண்டுகள் கொரோனா காலத்தில் நாடு முழுவதும்  லாக்டவுன் போடப்பட்டு  இருந்த போதிலும் கூட 70 லட்சம் புதிய வாடிக்கையாளர்களை ஜியோ ஃபைபர் நெட்வொர்க் பெற்றுள்ளது எனவும்  கூறினார். மூன்றில் இரண்டு வாடிக்கையாளர்கள் ஜியோவை தேர்வு செய்து வருகின்றனர் எனவும் இந்த மாநாட்டில் கலந்து கொண்ட முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார்.