ரிலையன்ஸ் ஜியோவின் 44வது வருடாந்திர கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் பேசிய ரிலையன்ஸ் குழும நிறுவனர் முகேஷ் அம்பானி, ”கூகுள் மற்றும் ஜியோ குழுக்கள் கூட்டாக இணைந்து ஒரு உண்மையான  ஸ்மார்ட்போனை உருவாக்கியுள்ளதாக அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். இரு பயன்பாடுகளிலிருந்தும் முழு தொகுப்பு பயன்பாடுகளையும் ஆதரிக்கும் ஒரு முழுமையான ஸ்மார்ட்போன் இது. ஜியோ மற்றும் கூகுள் இணைந்து உருவாக்கிய ஆண்ட்ராய்டு ஓஎஸ் இன் உகந்த பதிப்பால் இயக்கப்படுகிறது. இது அல்ட்ரா-மலிவு மற்றும் பேக்ஸ் கட்டிங்-எட்ஜ் அம்சங்கள் ஆகும். கூகுள் மற்றும் ஜியோ செயலிகளை பயன்படுத்தும் வகையில் புதிய ஸ்மார்ட்போன் இருக்கும்.  இது விநாயகர் சதுர்த்தி அன்று செப்டம்பர் 10ஆம் தேதி முதல் சந்தையில் கிடைக்கும். 5ஜி தொழில்நுட்ப சாதனங்களை உருவாக்குவதிலும் ஜியோ நிறுவனம் ஈடுபட்டுள்ளது” என்று கூறினார்.  மேலும்,  வாய்ஸ் அசிஸ்டண்ட், மொழி பெயர்ப்பு, சிறப்பான கேமரா மற்றும் பல்வேறு இதர அம்சங்களை கொண்டிருக்கிறது.






 


முன்னதாக, கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு ஒரு நிமிடம் மெளன அஞ்சலி செலுத்தி பேசிய முகேஷ் அம்பானி, மிகவும் கடினமான இந்த காலத்தில் எங்கள் வணிக செயல்திறனை விட எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்திருப்பது ரிலையன்ஸ்ன் மனிதாபமான முயற்சிகள்தான். எங்கள் பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கும் நாங்கள் அக்கறை செலுத்துகிறோம். எங்கள் வாடிக்கையாளர்கள், எங்கள் பங்குதாரர்கள் மற்றும் எங்கள் கூட்டாளிகள் ஆகியோர் மீதும் நாங்கள் அக்கறை கொள்கிறோம். மக்கள் மீதும் நாங்கள் அக்கறை கொள்கிறோம். உண்மையான ரிலையன்ஸின் நோக்கம் இதுதான், இது எங்களுடன் எப்போது இருக்கும். கொரோனாவுக்கு எதிரான போரில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஒவ்வொரு பணியாளர்களும் பங்கெடுத்தனர்” என்று கூறினார்.




 2021 நிதியாண்டின் வருடாந்திர அறிக்கையின்படி, ரிலையன்ஸ் இண்டஸ்டிரீஸ்,  சிஎஸ்ஆர் நடவடிக்கைகளுக்காக 1,140 கோடி ரூபாயை செலவு செய்துள்ளது. ரிலையன்ஸ் அறக்கட்டளை இந்தியாவின் முதல் கொரோனா சிறப்பு மருத்துவமனையை மும்பை மாநகராட்சியுடன் உருவாக்கியது குறிப்பிடத்தக்கது.


”கொரோனா காரணமாக வேலைகள், சம்பளங்கள், போனஸ் போன்ற எதுவும் குறைக்கப்படவில்லை என்பதை நாங்கள் உறுதி செய்தோம். அனைத்து மருத்துவ செலவுகளும் முழுமையாக வழங்கப்பட்டன. தடுப்பூசி இயக்கத்தை விரைவுபடுத்துவதற்காக, நாடு முழுவதும் 109 நகரங்களில் 116 தடுப்பூசி மையங்களை அமைத்துள்ளோம்” என நீட்டா அம்பானி கூறியுள்ளார்