ஒரு நாள் கூத்து திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில்  அறிமுகம் ஆனவர் நடிகை  நிவேதா பெத்துராஜ் .டிக் டிக் டிக், பொதுவாக எம்மனசு தங்கம், திமிரு புடிச்சவன், சங்கத்தமிழன் ஆகிய படங்களில் நடித்து தமிழ் திரையுலகில் பிரபலம் ஆனவர் . துபாய் மற்றும் சென்னையில் அடிக்கடி காணப்படும் நிவேதா சமூக வலைத்தளத்தில் மிகவும் ஆக்ட்டிவாக இருக்கும் நடிகைகளில் ஒரு ஒருவர் .




நேற்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் வெளியிட்ட தகவலால் பரபரப்பு ஏற்பட்டது . தற்பொழுது சென்னையில் இருக்கும் நிவேதா பிரபல மூன்லைட் ஹோட்டலில் தனது உணவை ஸ்விக்கி மூலம் ஆர்டர் செய்து உள்ளார் . வழங்கப்பட்ட உணவில் கரப்பான் பூச்சி  இருந்தது நிவேதாவிற்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது . மேலும் இது இரண்டாவது முறையாக இவ்வாறு நிகழ்கிறது என்று ஸ்விக்கியிடம் புகார் அளித்துள்ளார் . அவர்களின் பதில் அவருக்கு மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது .




இதை பற்றி நிவேதா " எனக்கு புரியவில்லை எப்படி இப்படி தரமற்ற உணவுகளை  ஹோட்டல்களில் வழங்குகிறார்கள், ஒரு முறைகூட தாங்கள் அளிக்கும் உணவை பார்க்க கூட மாட்டார்களா, எப்படி இந்த ஹோட்டல்களுக்கு ரேட்டிங் 4 புள்ளிகள் கொடுக்கிறார்கள் , இவ்வாறான ஹோட்டல்களை கண்டிப்பாக உணவுத்துறை ஆய்வு செய்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் , இந்த ஹோட்டலை அனைவரும் புகார் செய்யுங்கள் . உங்கள் உணவிற்கு மிகுந்த நன்றி "மூன்லைட் டேக் அவே" என்று தனது இன்ஸ்டா ஸ்டோரியில் பதிவிட்டு இருந்தார் .இதனை தொடர்ந்து ஸ்விக்கி இந்தியா " நாடு முழுவதும் உங்கள் சேவையைச் செய்து வருகிறீர்கள், தயவுகூர்ந்து உங்களுக்கான தகுந்த ஸ்டாண்டர்ட் செட் செய்து கொள்ளுங்கள் உங்களின் சேவை என்னை முகம் சுளிக்க வைத்துள்ளது" என்று தெரிவித்திருந்தார் .




 





இந்த இன்ஸ்டாகிராம் ஸ்டோரிக்கு பிறகு ரசிகர்கள் பலரும் அந்த ஹோட்டலைப் பற்றி அவர்களின் கசப்பான அனுபவத்தை, நிவேதாவிற்கு மெசேஜ் மூலம் அனுப்பி இருந்தனர் . மேலும் இன்று காலை ஸ்விக்கி தங்களின் தவறான சேவைக்கு மன்னிப்பும் கேட்டு 48மணி நேரத்திற்குள் தகுந்த நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளனர் என்று நிவேதா தனது பக்கத்தில் பகிர்ந்து உள்ளார். இது போன்ற செயல்கள் பலருக்கும் நடந்து வருகிறது , உணவுத்துறை கண்டிப்பாக பல ஹோட்டல்களை ஆய்வு செய்து தகுந்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டும், இந்த கொரோனா காலத்தில் பலரும் ஸ்விக்கியை நம்பி உள்ளனர் , இவ்வாறான தரமற்ற உணவு பல நோய்களை உண்டாக்கும்” என பலரும் தங்கள் சமூகவலைதளங்களில் பதிந்து வருகின்றனர்