Jio Sound Pay: ஜியோ பாரத் ஃபோன் பயனர்களா? புதிய திட்டம் அறிமுகம்! என்ன தெரியுமா?

Jio Sound Pay: ஜியோ பாரத் ஃபோன் பயனர்களுக்கு ஜியோ அறிவித்துள்ள புதிய திட்டம் பற்றிய விவரத்தை இங்கே காணலாம்.

Continues below advertisement

ஜியோ பாரத் ( JioBharat) ஃபோன் பயனர்களுக்கு புதிய வசதியை ஜியோ நிறுவனம் வெளியிட்டுள்ளது. 

Continues below advertisement

ஜியோ நிறுவனத்தின் பாரத் போன் பயனர்களுக்கு நல்ல திட்டத்தை ஜியோ வழங்கியுள்ளது. இதன் மூலம் வணிகர்கள் ஆண்டுக்கு ரூ.1,500/- பணத்தை மிச்சப்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ரிலையன்ஸ் ஜியோ பாரத் போன்களில் புதிய சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் சிறு மற்றும் நடுத்தர தொழிலாளர்கள் பயன்பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  ’JioSoundPay UPI’ பேமெண்ட்களை உறுதிப்படுத்த ஆடியோ அலெர்ட்டுகளை வழங்குகிறது. வர்த்தகர்களுக்கான கூடுதல் குரல் பெட்டியின் சேவையும் முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகிறது.

இதுவரை, சிறு வணிக உரிமையாளர்கள் பரிவர்த்தணைகளை உறுதி செய்ய ஒலிக்கும் குரல்/ பெட்டி-க்கு  மாதம் ரூ.125 செலவிட வேண்டியிருந்தது. JioSoundPay அறிமுகப்படுத்தப்பட்டதன் மூலம், JioBharat ஃபோன் பயனர்கள் ஒவ்வொரு ஆண்டும் ரூ.1,500 சேமிக்க முடியும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன் மூலம் multilingual audio உறுதிப்படுத்தும் வசதியை இலவசமாக வழங்குகிறது. 

ஜியோ பாரத் ஃபோன் அறிமுகப்படுத்தப்பட்டு நல்ல வரவேற்பை பெற்றது. 4ஜி நெர்ட்வொர்க் வசதியுடன் ரூ.677-க்கு கிடைக்கிறது. இப்போது விற்பனையாகும் ஃபோன்களில் JioSoundPay வசதியும் கொடுக்கப்படும்.

இது சிறுதொழில் செய்பவர்களுக்கு நல்ல பலனளிக்கும் என்று சொல்லப்படுகிறது.


 

Continues below advertisement
Sponsored Links by Taboola