செல்போன் இண்டர்நெட் பயன்பாட்டில் ஒரு புரட்சியையே செய்தது ஜியோதான். மாதத்திற்கு ஒரு ஜிபி, 2 ஜிபி என ஓட்டிக்கொண்டு இருந்த நேரத்தில் ஒருநாளைக்கு ஒரு ஜிபி, 2 ஜிபி என இணையசேவையை  கொடுத்தது.  தொடக்கத்தில் இலவசமாக சிம் கார்டுகளும் கொடுக்கப்பட்டன. ஜியோவின் அதிரடி அறிவிப்பால் அதிர்ந்த ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களும் ஜியோவுக்கு ஏற்ப இண்டர்நெட் கொடுக்கத் தொடங்கின. இப்படி பல அதிரடிகளை உண்டாக்கிய ஜியோ தன்னுடைய அடுத்த இலக்கை தொடங்கியுள்ளது. அந்த அதிரடி அறிவிப்பும், புதுப்புது ப்ளான்களும் இன்றும் தொடர்கின்றன. குறிப்பாக இது வொர்க் ப்ரம் ஹோம் காலம். கொரோனா ஊரடங்கலாம் வேலை, படிப்பு, என இண்டர்நெட்டின் பயன்பாடு அதிகரித்துள்ளது. பல அலுவலகங்களின் மீட்டிங் கூட இண்டர்நெட் பயன்பாட்டால் தொடர்கிறது. இப்படி அத்தியாவசியமாக மாறிவிட்ட இண்டர்நெட்டுக்கு புதுப்புது திட்டத்தை ஜியோ அறிமுகம் செய்து வருகிறது. அப்படி, புதிதாக களத்தில் இறங்கியுள்ள திட்டம் டேட்டா லோன். 




அவசரத் தேவையான நேரத்தில் வழக்கமான இண்டர்நெட் டேட்டா முடிந்துவிட்டால் என்ன செய்ய முடியும்.? அதற்காகத்தான் டேட்டா லோன் கொடுக்கிறது ஜியோ. எமர்ஜென்சி டேட்டா லோன் என்ற பெயரில் 1ஜிபி முதல் 5 ஜிபி வரையில் 5 லோன் ப்ளான்களை ஜியோ கொடுக்கிறது. நீங்கள் அவசரத்துக்கு லோன் பெற்று டேட்டா பயன்படுத்திக்கொண்டு பின்னர் பணம் செலுத்தினாலே போதுமானது.


ஜியோ லோன் பெறுவது எப்படி?


இண்டர்நெட் லோன் பெறுவதற்கு உங்களிடம்  MyJio app இருக்க வேண்டும்.


1.MyJio ஆப்-ஐ ஓபன் செய்துகொள்ள வேண்டும்
2.Mobileல் ஆப்ஷனுக்கும் கீழ் இருக்கும் Emergency Data Loan ஐ செலக்ட் செய்துகொள்ள வேண்டும்
3.அடுத்து Proceed ஆப்ஷனை செலக்ட் செய்ய வேண்டும்
4.அடுத்து Get emergency data ஆப்ஷன் சென்று பின்னர் Activate now கொடுக்க வேண்டும்.




இந்த இண்டர்நெட் லோனுக்கு எப்போது பணம் செலுத்த வேண்டும் என்ற விவரத்தை ஜியோ இதுவரை தெளிவாக குறிப்பிடவில்லை. ஆனால் பயன்படுத்திய பின்னர் பணம் செலுத்தலாம் என்ற பொதுவான அறிவிப்பை மட்டுமே வெளியிட்டுள்ளது.


முன்னதாக, ரிலையன்ஸ் ஜியோவின் 44-வது வருடாந்திர கூட்டத்தில் மலிவு விலை ஸ்மார்ட்ஃபோன் தொடர்பான அறிவிப்பை வெளியிட்டார் அம்பானி.


அப்போது பேசிய ரிலையன்ஸ் குழும நிறுவனர் முகேஷ் அம்பானி,  ''கூகுள் மற்றும் ஜியோ குழுக்கள் கூட்டாக இணைந்து ஒரு உண்மையான  ஸ்மார்ட்ஃபோனை உருவாக்கியுள்ளதாக அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். இரு பயன்பாடுகளிலிருந்தும் முழு தொகுப்பு பயன்பாடுகளையும் ஆதரிக்கும் ஒரு முழுமையான ஸ்மார்ட்போன் இது.




ஜியோ மற்றும் கூகுள் இணைந்து உருவாக்கிய ஆண்ட்ராய்டு ஓஎஸ் இன் உகந்த பதிப்பால் இயக்கப்படுகிறது. இது அல்ட்ரா-மலிவு மற்றும் பேக்ஸ் கட்டிங்-எட்ஜ் அம்சங்கள் ஆகும். கூகுள் மற்றும் ஜியோ செயலிகளை பயன்படுத்தும் வகையில் புதிய ஸ்மார்ட்போன் இருக்கும்.  இது விநாயகர் சதுர்த்தியான செப்டம்பர் 10-ஆம் தேதி முதல் சந்தையில் கிடைக்கும். 5ஜி தொழில்நுட்ப சாதனங்களை உருவாக்குவதிலும் ஜியோ நிறுவனம் ஈடுபட்டுள்ளது” என்றார்.