இந்தியாவில் பல இரு சக்கர வாகன ஓட்டிகள் சாலைப் பாதுகாப்பை சீரியஸாக எடுத்து கொள்வதில்லை. ஹெல்மெட் அணியாமல் மெத்தனமாக இருக்கின்றனர்.


 






இரு சக்கர வாகன ஓட்டிகள் தங்கள் பாதுகாப்பை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் இருப்பதை கண்டு விரக்தியடைந்த ஒரு போலீஸ் அதிகாரி, விதிகளை மீறுபவர்களிடம் இதுகுறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த ஒரு புதுமையான வழியைக் கண்டுபிடிக்க வேண்டியிருந்தது. 


ஹெல்மெட் அணியாமல் மோட்டார் சைக்கிளை ஓட்டும் நபருக்கு போலீஸ்காரர் அளித்த வேடிக்கையான பதில் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை ஜெய்க்கி யாதவ் என்ற பயனர், "இந்த சகோதரர் தனது திருமணத்தில் இவ்வளவு மரியாதையுடன் கூட ஆடை அணிந்திருக்க மாட்டார்" என பதிவிட்டு வெளியிட்டுள்ளார்.


இந்த வீடியோ 191k பார்வைகளையும் 9,500 லைக்குகளையும் பெற்றுள்ளது. அந்த வீடியோவில், ஹெல்மெட் அணியாமல் பைக்கில் சென்ற நபரை போலீஸ்காரர் தடுத்து நிறுத்துவதை காணலாம். போலீஸ் அலுவலர், அந்த நபரின் தலையில் மெதுவாக ஹெல்மெட்டைப் போட்டு, சில மந்திரங்களை உச்சரிப்பது போல அவருக்கு போக்குவரத்து விதிகளை விளக்குவதைக் காணலாம்.


பின்னர், அந்த காவல்துறை அலுவலர் பைக்கில் வந்தவரிடம் தலைக்கவசத்தை அணியுமாறு கைகளை கூப்பி கெஞ்சுகிறார். இனி ஹெல்மெட் அணியாமல் பிடிபட்டால், போக்குவரத்து விதிகளை மீறியதற்காக தற்போதைய தொகையை விட ஐந்து மடங்கு அபராதம் விதிக்கப்படும் என்று இந்தியில் போலீஸ்காரர் விளக்குகிறார். 


நெட்டிசன்கள் இந்த வீடியோவை பார்த்ததுடன், போக்குவரத்து விதிகளை மீறுபவருக்கு தனது தனித்துவமான வழியின் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய அதிகாரியைப் பாராட்டினர்.


இந்தியா முழுவதும் 4 லட்சத்து 22 ஆயிரத்து 659 சாலை விபத்துகள் நடந்துள்ளன. இது முந்தைய ஆண்டை விட (3 லட்சத்து 68 ஆயிரம்) அதிகம். இந்த விபத்துகள் மூலம், அதிகபட்சமாக உத்தரப் பிரதேசத்தில் 24 ஆயிரத்து 711 பேர் உயிரிழந்துள்ளனர். 16 ஆயிரத்து 685 மரணங்களுடன் தமிழ்நாடு 2ஆம் இடத்தை பிடித்துள்ளது. இது மொத்த மரணங்களில் 9.6 சதவீதம் ஆகும். 3ஆவது இடத்தில் மகாராஷ்டிரா உள்ளது.


தமிழ்நாட்டில் 2021ஆம் ஆண்டு மட்டும் சாலை விபத்து வழக்குகள் 22.4% அதிகரித்துள்ளதாக தேசிய குற்ற ஆவண காப்பகம் தெரிவித்துள்ளது. மாநிலத்தில் 2020ஆம் ஆண்டு 46 ஆயிரத்து 443 ஆக இருந்த சாலை விபத்துகள் எண்ணிக்கை, 2021ஆம் ஆண்டில் 57 ஆயிரத்து 90 ஆக அதிகரித்துள்ளது.