ட்விட்டர் நிறுவனத்தில் இருந்து விலகுவதற்கு முன்பிருந்தே தொடர்ச்சியாக பிட்காயின் மற்றும் கிரிப்டோ கரன்சிக்குத் தொடர்ச்சியாக ஆதரவுக்குரல் எழுப்பி வந்தார் ஜாக் டார்ஸி. இந்த நிலையில் தற்போது பிட்காயின்களை உற்பத்தி செய்யும் புதிய நிறுவனத்தை உருவாக்கி இருக்கிறார் ஜாக். கிரிப்டோ கரன்சி மைனிங் எனப்படும் இந்த பிட்காயின் சுரங்கம் உருவாக்கும் முறை குறித்து பல்வேறு சர்ச்சைகள் உள்ளன. உதாரணத்துக்கு இது உற்பத்தி செய்யப்படுவதற்குப் பயன்படும் மின்னனு ஆற்றல் காலநிலைமாற்றத்தை மேலும் பாதிக்கக் கூடியது என தீவிர கருத்துகள் நிலவி வருகின்றன.





இதற்கிடையேதான் பிட்காயின் சுரங்கம் அமைப்பது தொடர்பான அறிவிப்பை அண்மையில் ட்வீட் செய்துள்ளார் ஜாக். 






ஸ்கொயர் டு ப்ளாக் எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த நிறுவனத்துக்கு தாமஸ் டெம்பிள்டன் நிர்வாக இயக்குநராகப் பொறுப்பேற்று உள்ளார்.இதுகுறித்து அவரும் ட்வீட் செய்துள்ளார். 


பிட்காயின் அமெரிக்க டாலரின் மதிப்பை மாற்றும் என ஜாக் கருத்து கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையேதான் தற்போது பிட்காயின் சுரங்க நிறுவனத்துக்கான அறிவிப்பையும் ஜாக் வெளியிட்டுள்ளார். 


2020ம் ஆண்டே தனது சொத்து மதிப்பில் ஒரு பில்லியன் டாலரை பிட்காயினுக்கு நகர்த்தியிருந்தார் ஜாக் என்பது குறிப்பிடத்தக்கது. அது கொரோனா நிவாரணத்துக்காகப் பயன்படுத்தப்படும் என அறிவித்திருந்தார்.