அடுத்த கல்வியாண்டுக்குள் நீட் தேர்வின் சட்டத்தன்மை குறித்து உச்சநீதிமன்றம் உறுதியான நிலைப்பாடை எடுக்கும் வரை, மருத்துவக் கல்வி இடங்களில் மாநில ஒதுக்கீடு அடிப்படையில் மாணவர்கள் சேர்க்கை இருக்கவேண்டும் என ஓய்வுபெற்ற நீதிபதி கே. சந்துரு கருத்து தெரிவித்துள்ளார்.       


நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு நிரந்தர விலக்கு பெற வகை செய்யும் மசோதாவை தமிழ்நாடு அரசு தாக்கல் செய்தது.  சட்டமசோத தாக்கல் செய்வதற்கு முன்பு பேசிய முதல்வர் மு.க ஸ்டாலின், " பள்ளித் தேர்வு மதிப்பெண்கள் நெறிப்படுத்துதல் முறை மூலமாக சரி செய்யப்பட்டால் அது முறையான, நியாயமான மற்றும் நடுநிலையான சேர்க்கை முறையை வழங்கும். மருத்துவ கல்விப் படிப்புகளுக்கான சேர்க்கையினை இந்திய அரசியலமைப்பின் ஏழாவது அட்டவணையின் மூன்றாவது பட்டியலில் 25-வது உள்ளீட்டில் காணலாம். எனவே, மாநில அரசு அதை  முறைப்படுத்த தகுதியுடையது" என்று தெரிவித்தார். 


ஆனால், தமிழ்நாடு அரசின் இந்த சட்டப்புரிதலை ஓய்வுபெற்ற நீதிபதி கே. சந்துரு கேள்வி எழுப்பியுள்ளார்.  'தி இந்து' ஆங்கில நாளிதழில் எழுதிய கட்டுரையில், " ஏழாம் ஒருங்கியல் பட்டியலுள்ள ( மூன்றாம் பட்டியல் - Concurrent List) சட்டத்தை மாநில சட்டமன்றம் திருத்தம் செய்யலாமா? என்பது இங்கு கேள்வியல்ல. மாறாக, ஏழாம் ஒன்றியத்து பட்டியலில் (Central List) உள்ள 66-வது  உள்ளீட்டின் மூலம் இயற்றப்பட்ட மருத்துவக் கவுன்சில் சட்டப்பிரிவை மாநில அரசு நிராகரிக்க முடியுமா? என்பதுதான் இங்கு கேள்வி" என்று தெரிவித்துள்ளார்.




மேலும் விளக்கமாக தெரிவித்த அவர், முதுநிலை மருத்துவப் படிப்புகளில், மாநில அரசு மருத்துவக் கல்லூரிகளின் கலந்தாய்வில் மாநில அரசுகளின் உரிமைகளை பறிக்கும் விதமாக இந்திய மருத்துவக் கவுன்சிலின்  வழிகாட்டு நெறிமுறைகளை உச்சநீதிமன்றம் விசாரித்தது. தனது சட்டத்தின் உறுபொருளை மீறி இந்திய மருத்துவக் கவுன்சில் இந்த வழிமுறைகளை வெளியிட்டதாகக் கூறி 9(c) சட்டப்பிரிவை ரத்து செய்தது.  


இதன் அடிப்படையில் தான், ஏழாம் ஒருங்கியல் பட்டியலுள்ள 25 உள்ளீட்டின் மூலம் (Concurrent List) நீட் சட்டத்தை மாநில சட்டமன்றம் திருத்தம் செய்யலாம் என்று தமிழ்நாடு அரசு நம்புகிறது. ஆனால்,  முதுநிலை மருத்துவப் படிப்புக்கான வழிமுறைக்கும், நீட் தேர்வுக்கும் ஏகப்பட்ட வேறுபாடுகள் உள்ளன. அந்த வழக்கில்,  இந்திய மருத்துவக் கவுன்சில் வகுத்த வழிமுறைகளை மட்டுமே உச்சநீதிமன்றம் விசாரித்தது.


ஆனால், அகில இந்திய மருத்துவக் கவுன்சில் சட்டம் 1956 மற்றும் 2017ம் ஆண்டு திருத்தம் செய்யப்பட்ட பல் மருத்துவர் சட்டம் 1948ன்படி, நாடுமுழுவதும் உள்ள 100 சதவீத மருத்துவ/பல் மருத்துவ (பட்டப்படிப்பு)  இருக்கைகளுக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு எனப்படும் நீட் தேர்வை தேசிய தேர்வு முகமை நடத்தி வருகிறது. அதாவது, நீட் தேர்வு,  அகில இந்திய மருத்துவக் கவுன்சில் சட்டப்பிரிவு 10(D)ன் கீழ் சேர்க்கப்பட்டுள்ளது. மேலும், மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வை உச்ச நீதிமன்றம் ஏற்கனவே ஏற்றுக் கொண்டுள்ளது.  


 



 


நீட் தேர்வு காரணமாக அரசுப்பள்ளி மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர் என்ற தரவுகள் மட்டும் பத்தாது. சட்டம் இயற்றுவதற்கான அதிகாரம் இல்லாமல் தரவுகள் வைத்து என்ன பண்ணமுடியும்.      


கடந்த 2017ல்  மருத்துவப் படிப்புகளில் சேர, மாநில பாடத் திட்டத்தின் கீழ் படித்த மாணவர்களுக்கு 85 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கும் தமிழ்நாடு அரசு உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. இதனையடுத்து தான்,  நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு நிரந்தர விலக்கு பெற வகை செய்யும் மசோதாவை தமிழ்நாடு அரசு நிறைவேற்றியது. இதற்கு, இந்தியக் குடியரசுத் தலைவர் ஒப்புதல் வழங்கவில்லை. தற்போதும் , இதுபோன்ற நிலை உருவாகக் கூடும். 


எனவே, இந்தத் தேர்வின் சட்டத்தன்மை குறித்த போராட்டம் நீதிமன்றங்களின் கையில் தான் உள்ளது. அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள்ஒதுக்கீடு வழங்கும் சட்ட உத்தரவை  ரத்து செய்யக் கோரும் மனு விசாரனையில் உள்ளது. மேலும், மருத்துவப் படிப்புகளுக்கு நீட் தேர்வு கட்டாயமாக்கப்படுவதை எதிர்த்தும் ஒரு மனு  விசாரணையில் உள்ளது. இந்த இரண்டு வழக்கிலும், சாதகமான தீர்ப்பு வரும் வரையில், தமிழ்நாடு அரசால் சட்டத்திருத்தம் மேற்கொள்ள முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.  


Source: The Hindu