மொபைலில் ஏற்படும் சப்தம் பலருக்கு தலை வலியை ஏற்படுத்தும் கவனம். இதனால் வேலைகளில் கவனம் செலுத்த முடியாமல் போகிறது. மேலும் சரியான தூக்கம் கூட சிலருக்கு வருவதில்லை. இந்த 'தேவையற்ற' சப்தங்களின் தாக்கத்தை குறைக்கவும், அதிகரிக்கவும் வாலியும் ஆப்சன் அனைத்தது மொபைலிலும் பரிந்துரைக்கப்பட்டு உள்ளது. இது ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் போன்கள் மற்றும் ஐபோன்களில் பயன்பாட்டில் உள்ளன. இதற்கெல்லாம் ஒரு படி மேலே சென்று, ஆப்பிள் நிறுவனம் நன்றாக தூங்க உதவவும், இரைச்சல் சப்தத்தை போக்கவும் ஒரு அம்சத்தை இணைத்துள்ளது.
இந்த அம்சம் iOS 15 இன் ஒரு பகுதியாக வெளியிடப்பட்டது. தேவையற்ற சப்தத்தை மறைக்கவே இதனை கொண்டு வந்துள்ளாதாக ஐபோன் நிறுவனம் தெரிவித்துள்ளது. இது கவனச்சிதறல்களைக் குறைக்கவும், அமைதியாக ஓய்வெடுக்கவும் உதவும். நீங்கள் ஐபோன் வைத்திருந்தால் இந்த அம்சத்தை முயற்சித்துப் பார்க்கலாம்.
- செட்டிங்கில் சென்று, ACCESSIBILLITY என்பதை கிளிக் செய்யவும்
- AUDIO/VISUAL என்பதை கிளிக் செய்யவும்
- BACKGROUND SOUNDS என்பதை கிளிக் செய்யவும்
- அதன் பிறகு தோன்றும் 6 அம்சங்களில் உங்களுக்கு விருப்பமான ஒன்றை தேர்வு செய்து கொள்ளவும்.
இந்த நிலையில் உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான ஆப்பிள் பல அற்புதமான சாதனங்களை இந்த 2022-ஆம் ஆண்டில் கொண்டுவர தயாராக உள்ளது. இதில் நாட்ச் இல்லாத முதல் ஐபோன் மாடல், முற்றிலும் மறுவடிவமைப்பு செய்யப்பட்ட மேக்புக் ஏர், மினி எல்இடி டிஸ்ப்ளே கொண்ட பெரிய ஐமாக் மற்றும் ஆப்பிள் சிலிக்கான் சிப் மற்றும் ஆப்பிள் வாட்சு என்ற ஆப்பிள் நிறுவனத்தின் 2022 ஆம் ஆண்டிற்கான பட்டியல் மிக நீளமாக நீண்டு கொண்டே செல்கிறது. இப்போது கூறிய சாதனங்கள் எல்லாம் இந்த 2022 ஆம் ஆண்டில் அறிமுகம் செய்ய எதிர்பார்க்கப்படுகிறது. ஆப்பிள் அதன் ஐபோன் மினி மாறுபாட்டைக் குறைக்கப் போகிறது என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
ஆப்பிள் 2022 ஆம் ஆண்டில் iPhone SE இன் புதிய பதிப்பை அறிமுகப்படுத்துவதாக வதந்தி பரவுகிறது, இது தற்போதைய iPhone SE போன்ற வடிவமைப்பைக் கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த ஐபோன் எஸ்இ சாதனம் A14 அல்லது A15 சிப்செட் மற்றும் 5G மோடம் ஆகியவற்றைக் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல், ஆப்பிள் இன்னும் புதிய சாதனத்தை 2022 ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யும் என்றும் அடுத்த ஆண்டு iPhone SE Plus இடம்பெறவும் வாய்ப்புகள் உள்ளது என்று கூறப்பட்டுள்ளது.