விரைவில் தனது ஐஃபோன் 14 ரக மாடலை அறிமுகப்படுத்த உள்ளது ஆப்பிள் நிறுவனம். இதில் இருக்கும் முக்கிய அம்சமே இது சிம்கார்ட் இல்லாத போனாக சந்தையில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது என்பதுதான். சிம்கார்ட் இல்லாத போன் சாத்தியமா? என யோசிக்கிறீர்களா... சாத்தியம், மேலும் ஆப்பிள் நிறுவனத்தின் இந்த முன்மாதிரி மாடல் வெற்றி பெறும் நிலையில் அனைத்து மொபைல் ஃபோன் நிறுவனங்களும் இந்தப் பாணியை பின்பற்ற வாய்ப்பு உள்ளது. 


சிம்கார்ட் இல்லையென்றால் வேறு எப்படி?


சிம்கார்ட்டுக்கு பதிலாக ஈ-சிம் என்கிற புதிய பாணியை அறிமுகப்படுத்த உள்ளது ஆப்பிள். இதன்மூலம் உங்களது ஆப்பிரேட்டருடன் நீங்கள் பதிவு செய்யும் நிலையில் சிம் கார்ட்டில் இருப்பது போன்ற அத்தனை டேட்டாக்களையும் உங்கள் போனில்  தரவிறக்கம் செய்துகொள்ளலாம். ஈ-சிம் முறை அறிமுகப்படுத்தப்பட உள்ளதால் போன் மாடல்களிலும் பல புதுமைகளைக் கொண்டுவர முடியும் உதாரணமாக அதன் வாட்டர் ஃப்ரூப் கட்டமைப்பை மேம்படுத்த முடியும்.


இதில் இருக்கும் பின்னடைவு என்ன?


ஈசிம் என்பதால் சிம்கார்ட் மாற்ற வேண்டிய நிலையில் ஒவ்வொரு முறையும் நெட்வொர்க் ஆப்பரேட்டரிடம் நேரடியாகச் சென்று பதிவு செய்ய வேண்டும் என்பதே இதில் இருக்கும் ஒரு பின்னடைவு. 


ஏற்கெனவே இந்த ஈசிம் முறையை சாம்சங் கேலக்ஸி எஸ் மாடல் ரக போன்கள் மற்றும் கூகுள் பிக்சல் ரக போன்கள் பயன்படுத்தி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.இந்த புதிய மாடல் வருகின்ற 2022 செப்டம்பரில் வெளியாகும் என ஆப்பிள் ஆர்வலர்கள் கணித்துள்ளனர்.






ஐபோன் 13 ப்ரோ மாடல் மிக அண்மையில்தான் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.