Internet Explorer : முடிவுக்கு வந்தது இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரரின் 27 ஆண்டுகால பயணம்! - டிவிட்டரில் உருகும் 90’s கிட்ஸ்!

என்னதான் ஸ்லோவாக இருந்தாலும் கூட 90 களில் பிறந்த குழந்தைகளுக்கு இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் ஒரு  'nostalgic' உணர்வாகத்தானே  இருக்கும்.

Continues below advertisement

இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர்.

Continues below advertisement


கம்ப்யூட்டர் என ஒன்று பிரபலமடைந்த காலக்கட்டத்தில் அதனுடனே பயணித்த தேடுபொறுதா இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர்.  இதனை பயன்படுத்தாத 90'S kids களே இருக்க முடியாது. இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 2003 இல் 95% பயனர் பங்குடன்  உச்சத்தை  தொட்டது.உலகின் முன்னணி தேடுபொறியாக இருந்த Internet Explorer , கூகுளின் குரோம் வந்த பிறகு மிகப்பெரிய அடி வாங்கியது.  மற்ற  பிரவுசர்களை காட்டிலும் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் ஸ்லோவாகவே இயங்கியது. அதன் பிறகு மைக்ரோசாஃப்ட் நிறுவனத்திற்கு சொந்தமான   Internet Explorer சில அடிப்படை விஷயங்களில் மாற்றங்களை கொண்டு வந்தது. அப்போதும் அதற்கு மவுசு இல்லை. இதனால் அந்த நிறுவனம்  Internet Explorer ஐ நிரந்தரமாக மூட முடிவெடுத்தது. 



குட் பை இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர்!

இன்றுடன் (ஜூன் 15 ) இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் பயன்பாட்டை அந்த நிறுவனம் முற்றிலுமாக நிறுத்துகிறது. இன்டர்நெட் எக்ஸ்புளோரர் ஆகஸ்ட் 1995 இல் அறிமுகமானது.1996 இல்  ஜாவாஸ்கிரிப்ட் புரோகிராம் செய்யப்பட்டு  JPEGகள் மற்றும் GIFகளைப் பார்க்க பயனர்களை அனுமதித்தது. இன்றைக்கு நம்பர் ஒன் தேடுபொறியாக இருக்கும் குரோம் போன்றவற்றிற்கு இண்டர்நெட் எக்ஸ்ப்ளோரர்தான் முன்னோடி என்றால் மிகையில்லை. 


we miss you !

இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரருக்கு மாற்றாக மைக்ரோசாஃப்ட் எட்ஜ் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில்  இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் மோட் இருப்பதால் பயனாளர்கள் பயன்படுத்திக்கொள்ளலாம் என்றும் பல வருடங்களாக எங்களுக்கு ஆதரவு கொடுத்த மக்களுக்கு நன்றி என உருக்கமாக தெரிவித்துள்ளது. என்னதான் ஸ்லோவாக இருந்தாலும் கூட 90 களில் பிறந்த குழந்தைகளுக்கு இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் ஒரு  'nostalgic' உணர்வாகத்தானே  இருக்கும். டிவிட்டரில் தங்களில் ஏக்கங்களை மீம்ஸ்களாக  பகிர்ந்து அதகளப்படுத்தி வருகின்றனர் நெட்டிசன்கள்  நீங்களே பாருங்களேன்!

Continues below advertisement
Sponsored Links by Taboola