குறைந்தபட்சம் வட்டி விகிதத்தை தற்போதுள்ள 7.20 சதவிகித்திலிருந்து 20 அடிப்படை புள்ளிகள் உயர்த்தி 7.40 சதவிகிதமாக ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா மாற்றியமைத்து உள்ளது. இது பயனாளர்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. பெரும்பாலான நுகர்வோர் கடன்களான ஆட்டோ கடன், வீட்டு கடன், தனிக்கடன் ஆகியவைக்கும் குறைந்தபட்சம் வட்டி விகிதத்திற்கும் தொடர்பு உள்ளது.
வட்டியுடன் கூடிய கடனை திருப்பி செலுத்துவதற்கான கால அவகாசத்திற்கான குறைந்தபட்ச வட்டி விகிதம் 7.05 சதவிகிதத்திலிருந்து 7.70 சதவிகிதமாக உயர்த்தப்பட்டு உள்ளது. உயர்த்தப்பட்டுள்ள ரெப்போ வட்டி விகிதம் இந்தாண்டு ஜூன் 15ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாற்றியமைக்கப்பட்டுள்ள ரெப்போ வட்டி விகிதம் லாபத்துடன் (கிரெடிட் ரிஸ்க் பிரீமியம்) கூடிய 7.15 சதவிகிதமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது, ரெப்போ வட்டி விகிதம் லாபத்துடன் கூடிய 6.65 சதவிகிதமாக உள்ளது. வாடிக்கையாளர்களுக்கு சிறந்த வட்டி விகிதம் அளிக்கும் வகையில் பழைய முறையிலிருந்து மாறி கடந்த 2016ஆம் ஆண்டு, குறைந்த பட்ச வட்டி விகித முறை அறிமுகப்படுத்தப்பட்டது.
2 கோடி ரூபாய்க்கு குறைவான பணத்தை குறிப்பிட்ட கால அவகாசம் வரை வங்கியில் வைப்பு நிதியாக செலுத்துவதற்கான விகிதமும் 0.20 சதவிகிதம் உயர்த்தப்பட்டுள்ளது.
சில்லறை உள்நாட்டு டெபாசிட்டுகளுக்கான (ரூ. 2 கோடிக்கும் குறைவான) திருத்தப்பட்ட வட்டி விகிதங்கள் ஜூன் 14, 2022 முதல் அமலுக்கு வருகின்றன. 211 நாட்கள் முதல் 1 வருடத்திற்கும் குறைவான வைப்புகளுக்கு, கடனளிப்பவர் முந்தைய 4.40 சதவீதத்திலிருந்து 4.60 சதவீத வட்டி விகிதத்தை வழங்குவர். மூத்த குடிமக்களுக்கு 4.90 சதவீதத்தில் இருந்து 5.10 சதவீத வட்டி வழங்கப்படும்.
இந்திய ரிசர்வ் வங்கி கடந்த வாரம் ரெப்போ விகிதத்தை 0.50 சதவீதம் முதல் 4.90 சதவீதம் வரை உயர்த்தியது. ரெப்போ என்பது வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி விதிக்கும் குறுகிய கால கடன் விகிதமாகும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்