விண்வெளி கழிவுகளை அகற்றும் புதிய தொழில்நுட்பத்தின் சோதனை முயற்சியை நாசா செய்திருக்கிறது.
விண்வெளி குப்பைகள் :
உலகிற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருப்பது விண்வெளியில் கொட்டிக்கிடக்கும் தொழில்நுட்ப குப்பைகள்தான். இது நாசா உள்ளிட்ட பல ஆராய்ச்சி நிறுவனங்கள்தான் பொறுப்பு. பூமியில் இருந்து ஏவப்படும் ஏவுகனைகளின் கழிவுகள் , செயலிழந்த சாட்டிலைட் பாகங்கள் உள்ளிட்ட அனைத்து கழிவுகளைத்தான் விண்வெளி குப்பைகள் என்கிறோம். இதனை ஸ்பேஸ் ஜங்க்ஸ் (Space Junks) அல்லது ஸ்பேஸ் டெப்ரிஸ் (Space Debris) என்றும் அழைக்கின்றனர். இந்த விண்வெளி குப்பைகள், 600 கிமீக்கு கீழே என்கிற சுற்றுப்பாதையில் இருக்கும் பட்சத்தில், அது சில ஆண்டுகளுக்குள் பூமிக்கு திரும்பும்.அது மனித உயிர்களுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல்தானே !
கழிவுகளை அகற்றும் புதிய தொழில்நுட்பம் :
அமெரிக்காவின் டெக்சாஸை தளமாகக் கொண்ட கழிவுகளை அகற்றும் நிறுவனமான நானோராக்ஸ் புதிய கழிவுகளை அகற்றும் தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளது. இதற்கு 'ஸ்பெஷல் பேக் என பெயர் வைக்கப்படுள்ளது. இது 600 பவுண்ட் வரையில் குப்பைகளை சேமிக்கும் திறன் கொண்டது. இதனை சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ISS) நாசா வெற்றிகரமாக சோதித்துள்ளது. சோதனையானது ISS இலிருந்து கழிவுகளை அகற்றுவதற்கான மிகவும் திறமையான மற்றும் நிலையான மாதிரியாக இருக்கும் என கூறப்படுகிறது. எதிர்கால விண்வெளி நிலையங்களுக்கு இது மிகுந்த உதவியாக இருக்கும் என கூறப்படுகிறது. கடந்த ஜூலை 2 ஆம் தேதி சர்வதேச விண்வெளி நிலையத்தின் கமர்ஷியல் பிஷப் ஏர்லாக்கில் (Commercial Bishop Airlock) இருந்து சுமார் 172 பவுண்ட் குப்பைகள் 'ஸ்பெஷல் பேக்' (Special bag) மூலம் "நேரடியாக" விண்வெளிக்குள் வெளியேற்றப்பட்டது.
முன்பு எப்படி கழிவுகளை அகற்றுவார்கள் :
வழக்கமாக, சர்வதேச விண்வெளி வீரர்கள் குப்பைகளை சேகரித்து, சிக்னஸ் என்னும் விண்வெளி குப்பைகளை ஏற்றும் சரக்கு வாகனத்தில் மாதக்கணக்கில் காத்திருந்து விண்வெளி நிலையத்தில் சேமித்து வைப்பார்கள். சிக்னஸ் என்பது விண்வெளி நிலையத்திற்கு பொருட்களை கொண்டு செல்வதற்காக வடிவமைக்கப்பட்ட ஒரு 'செலவிடக்கூடிய' விண்கலமாகும். அதன் முதன்மைப் பணியை முடித்த பிறகு, விண்வெளி வீரர்கள் அதில் குப்பைப் பைகளை நிரப்பி விண்கலத்தை வெளியிடுவார்கள். இதற்குப் பிறகு, அது பூமியின் வளிமண்டலத்தில் மீண்டும் நுழையும் போது சுற்றுப்பாதையில் இருந்து முற்றிலும் எரிகிறது. இனிமேல் வேலைப்பளு மற்றும் செலவினங்கள் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படியான தொழில்நுட்பங்கள் இதுவே முதல் முறை என கூறப்பட்டாலும் இதற்கு முன்னதாக இப்படியான தொழில்நுட்பத்தை பயன்படுத்தியிருக்கிறது. அதில் சில அப்டேட் செய்யப்பட்டிருக்காலம் என கூறப்படுகிறது.