Instagram Threads : த்ரெட்ஸ் செயலி முழு profile மற்றும் அதிலுள்ள Data-க்கள் அனைத்தையும் டெலிட் செய்ய வேண்டும் என்றால் இன்ஸ்டாகிராம் பக்கத்தையே டெலிட் செய்ய வேண்டியிருக்கும்.
இன்ஸ்டாகிராம் 'த்ரெட்ஸ்’
எலான் மஸ்க் ட்விட்டரை கைப்பற்றியதில் இருந்து ட்விட்டர் ஏடாகூடமாக மாறி வருகிறது. ட்விட்டர் தளத்தின் அடிப்படையான தத்துவத்தில் பலவற்றையும் மாற்றி அதிர்ச்சி அளித்தார். காசு கட்டினால் ப்ளூ டிக் என்று தொடங்கி ப்ளூ டிக் வைத்திருப்பவர்கள் 10,000 வார்த்தைகள் வரை ட்வீட் செய்யலாம் என்பது வரை, எல்லா அப்டேட்டுகளும் விமர்சனங்கள் பெற்றாலும், அறிமுகப்படுத்தப்பட்டுக்கொண்டுதான் இருக்கின்றன.
இந்நிலையில், ட்விட்டருக்கு நேரடி போட்டியாக வடிவமைக்கப்பட்ட டெக்ஸ்ட் அடிப்படையிலான ஆப்-ஆன த்ரெட்ஸை நேற்று (ஜூலை 6) அன்று மெட்டாவிற்கு சொந்தமான Instagram அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியது. இந்த செயலியை தற்போது அதிகமான பயனர்கள் பதிவிறக்கம் செய்து பயன்படுத்த தொடங்கிவிட்டனர். த்ரெட்ஸ் செயலி அறிமுகம் செய்யப்பட்ட முதல் இரண்டு மணி நேரத்தில் 2 மில்லியன் பயனர்களும், முதல் 4 மணி நேரத்தில் 5 மில்லியன் பயனர்களும, முதல் 7 மணி நேரத்தில் 10 மில்லியன் பயனர்களும் கணக்கு தொடங்கி உள்ளனர். இந்த எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது.
ஷாக் கொடுத்த மெட்டா
இதில் பயனர்களை கவரும் வகையில் பல அம்சங்கள் இருந்தாலும், இதில் இருக்கும் ஒரு அம்சம் பயனர்கள் மத்தியல் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, உங்கள் த்ரெட்ஸ் Profile-ஐ நீக்க முடியாது. உங்கள் த்ரெட்ஸ் முழு Profile மற்றும் Data-க்கள் அனைத்தையும் டெலிட் செய்ய வேண்டும் என்றால், இன்ஸ்டாகிராம் பக்கத்தையே டெலிட் செய்ய வேண்டியிருக்கும்.
உங்கள் த்ரெட்ஸ் செயலி அக்கவுண்டை தற்காலிகமாக மட்டுமே செயலிழக்க செய்ய முடியும். அதாவது, இன்ஸ்டாகிராம் அக்கவுண்டை டெலிட் செய்தால் மட்டுமே த்ரெட்ஸ் Profile-ஐ நீக்க முடியும் என்று மெட்டா தெரிவித்துள்ளது.
தற்காலிகமாக த்ரெட்ஸ் அக்கவுண்டை செயலிழக்க செய்வது, இன்ஸ்டாகிராம் அக்கவுண்டை பாதிக்காது. இதனை வாரத்திற்கு ஒரு முறை மட்டுமே உங்கள் த்ரெட்ஸ் அக்கவுண்டை செயலிழக்க செய்ய முடியும். இதற்கு குறிப்பிட்ட நேரமும் இருக்கிறது. அதவாது, 30 நிமிடங்களை வரை அக்கவுண்டை தற்காலிகமாக செயலிழக்க செய்ய முடியும். நிரந்தமாக அக்கவுண்டை டெலிக் செய்ய நினைத்தால் மட்டுமே இன்ஸ்டாகிராம் அக்கவுண்ட் டெலிக் ஆகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளளது.
த்ரெட்ஸ் அக்கவுண்டை Deactivate செய்வது எப்படி?
- முதலில் த்ரெட்ஸ் செயலிக்குள் நுழைய வேண்டும். அதில் உங்கள் Display Profile picture-க்கு மேலே உள்ள Double dash என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.
- அதில் Account-ஐ கிளிக் செய்தால் Take a Break மற்றும் Deactivate என்ற ஆப்ஷன் இருக்கும்.
- அதில் உங்கள் விருப்பத்திற்கேற்ப சிறிது நேரமா அல்லது நிரந்தரமாக நீக்குவதே தேர்வு செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது.