மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான இஸ்டாகிரம்தான் எங்க்ங்ஸ்டர்ஸுன் நம்பர் ஒன் சாய்ஸாக இருக்கிறது. இன்ஸ்டாகிராமில் இளைஞர்களை கவர ஏகப்பட்ட வசதிகள் இருக்கின்றன. இருந்தாலும் இளைஞர்களை கவரும் வகையில் பல புதுமைகளை இன்ஸ்டாகிராம் அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் ரீ-போஸ்ட் என்னும் புதிய வசதியின் சோதனை ஓட்டத்தை இன்ஸ்டா துவங்கியிருப்பதாக செய்திகள் வெளியாகியிருக்கிறது.


விரைவில் ரீ-போஸ்ட் செய்யும் வசதி :


முதற்கட்டமாக இன்ஸ்டாகிராமில் வேலை செய்யும் பணியாளர்களுக்கு மட்டும் இந்த பதிப்பு அறிமுகமாகியுள்ளதாக தெரிகிறது.சமூக ஊடக ஆலோசகர் மாட் நவர்ரா என்பவர் , இன்ஸ்டாகிராமில் வேலை செய்யும்  ஆடம் மொஸ்ஸெரியின் என்பவரின் பக்கத்தை ஸ்கிரீன் ஷார்ட் எடுத்து பகிர்ந்திருக்கிறார். .அதில் ஐந்தாவது ஐகானாக , டிவிட்டரின் ரீ-ட்வீட் ஐகான் போல உள்ளது. முன்னதாக அலெஸாண்ட்ரோ பலுஸி என்னும் ரிவெர்ஸ் பொறியாளர் இதை பகிர்ந்திருந்தார். டேக் செய்யும் வீடியோக்கள் அல்லது பகிரப்படும் பொது கணக்கில் உள்ள பதிவுகளை ரீ-போஸ்ட் செய்ய இந்த Instagram 'reposts' உதவியாக இருக்கும் என நம்பப்படுகிறது. ஏற்கனவே இன்ஸ்டாகிராம் வாயிலாக சிலர் ரீ-போஸ்ட் செய்வதை பார்த்திருப்பீர்கள் .இதில் என்ன புதுமை இருக்கிறது என நீங்கள் நினைக்கலாம்... ஒரு இடுகையை மறுபகிர்வு செய்வது Instagram க்கு முற்றிலும் புதியதல்ல. இடுகை, கதை அல்லது ரீலை மறுபகிர்வு செய்யும் வசதி நீண்ட காலமாக இருந்து வருகிறது, ஆனால் ஒரு மூன்றாம் தரப்பு அப்ளிகேஷனை பயன்படுத்துவார்கள் . அதனை இன்ஸ்டாகிராமே தற்போது அறிமுகப்படுத்தவுள்ளது சிறப்பான விஷயமதானே ! தற்போது பணியாளார்களுக்கு மட்டுமே கிடைத்துள்ள இந்த ரீ-போஸ்ட் வசதி , விரைவில் பீட்டா வெர்சனில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


 






இந்த வீடியோஸ் எல்லாமே ரீல்ஸ்தான் :


 இது ஒருபுறம் இருக்க இன்ஸ்டாகிராம் அண்மையில் ஒரு அறிவிப்பை வெளியிட்டது. அந்த புதிய அறிவிப்பின் படி 15 நிமிடங்களுக்குக் கீழ் இருக்கும் வீடியோக்கள் எல்லாம் ரீல்ஸாக ஷேர் செய்யப்படும் என்று கூறியுள்ளது. பழைய வீடியோக்கள் அதே நிலையிலேயே இருக்கும் என்றும் இனி பதிவேற்றம் செய்யப்படும் வீடியோக்கள் ரீல்ஸாக மாற்றப்படும் என்றும் அந்நிறுவனம் கூறியுள்ளது. ஃபுல் ஸ்க்ரீன் அனுபவத்தை பயனாளர்களுக்குக் கொடுப்பதற்காக இந்த வசதியை அறிமுகப்படுத்துவதாக இன்ஸ்டாகிராம் கூறியுள்ளது. அதே போல, வீடியோ மற்றும் ரீல்ஸ் என்ற இரண்டு டேப்களை ஒரே இடத்தில் வைத்து, ரீல்ஸ் மற்றும் வீடியோ இரண்டையும் ஒரே இடத்தில் பார்ப்பதற்கு வழிவகை செய்யும் என்று கூறப்பட்டுள்ளது.  




ஆடியோ பயன்படுத்துவதை தடுக்கலாம் :


அதே போல உங்களுடைய இன்ஸ்டாகிராம் கணக்கு பொதுவாக இருந்து, நீங்கள் வீடியோ ஒன்றை பதிவிட்டால் அது ரீல்ஸாக மாற்றம் செய்யப்படும். அந்த ஆடியோவிற்கு யார் வேண்டுமானாலும் ரீல்ஸ் செய்து வீடியோ பதிவேற்றலாம். எனினும், உங்களுடைய ஆடியோவை வைத்து மற்றொரு ரீல்ஸ் செய்யப்படுவதை செட்டிங்ஸ் மூலம் தடுக்கலாம். ஆனால் இந்த புதிய அறிவிப்பு இன்ஸ்டாகிராம் பயனாளர்களை அதிருப்தியில் தள்ளியுள்ளது. ஏனெனில், ரீல்ஸானது வெர்டிகள் மோடில் எடுக்கப்படுகிறது. பல்வேறு வீடியோக்கள் ஹரிசாண்ட்டல் வடிவில் பதிவேற்றம் செய்யப்படுகிறது. தற்போது ஹரிசாண்ட்டல் வடிவிலான வீடியோக்கள் ரீல்ஸில் எப்படி தெரியும் என்ற கேள்வி பயனாளர்களிடையே எழுந்துள்ளது