தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் சமந்தா. சமந்தாவும், நாக சைதன்யாவும் காதலித்து வந்த நிலையில், கடந்த 2017 ஆம் ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். திருமணம் முடிந்த பின்னரும் சமந்தா திரைப்படங்களில் நடித்ததோடு மட்டுமல்லாமல், கவர்ச்சி புகைப்படங்களையும் தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வந்தார்.
இது நாகசைதன்யாவிற்கு பிடிக்கவில்லை என சொல்லப்பட்டது. இந்த நிலையில் திடிரென இருவரும் தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தங்களது விவாகரத்து குறித்தான அதிகாரப்பூர்வ தகவலை வெளியிட்டனர். அதனால் மனஉளைச்சலில் இருந்த சமந்தா, ஆன்மீகத் தளங்களுக்கு சென்று வந்தார்.
விவாகரத்திற்கு பின்னர் மீண்டும் தனது சினிமா கேரியரில் அதிக கவனம் செலுத்தி வரும் சமந்தா யசோதா, ஹாலிவுட்டில் ‘அரேஞ்ச்மெண்ட்ஸ் ஆப் லவ்’ உள்ளிட்ட பல படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார்.
சமந்தா உடலை கவனமாக பேணும் நடிகைகளில் ஒருவர். அதற்காக கடுமையான உடற்பயிற்சிகளை மேற்கொண்டு வரும் அவர் இது தொடர்பான வீடியோவையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்வார். அப்படி ஒரு வீடியோவை சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
நடிகர் அல்லு அர்ஜூன் நடிப்பில் நாளை வெளியாகும் புஷ்பா படத்தில் நடிகை சமந்தா ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார். இந்தப் பாடலின் வரிகள் ஆண்களை கொச்சைப்படுத்தும் வகையில் இருப்பதாக கூறி, ஆந்திராவில் உள்ள ஒரு ஆண்கள் அமைப்பு வழக்கு தொடர்ந்து உள்ளது குறிப்பிடத்தக்கது. வைரல் வரிகளால், தெலுங்கில் இந்திரா செளஹானும், தமிழில் ஆண்ட்ரியா ஜெரிமியாவும் பாடியிருக்கும் பாடல் பட்டையை கிளப்புகிறது.