பொழுதுபோக்கிற்காகவும் வருமான நோக்கத்திற்காகவும் திறமையை வெளிப்படுத்துவதற்காகவும் பலராலும் பயன்படுத்தப்படும் சமூக வலைத்தளங்களில் ஒன்றாக இருப்பது இன்ஸ்டாகிராம் . பேஸ்புக் ஓனர் மார்க் நிர்வகித்துவரும் மற்றொரு சோஷியல் மீடியாதான் இன்ஸ்டா. புகைப்படங்கள், வீடியோ ரீல்ஸ் என இன்ஸ்டாவும் இளசுகளின் பொழுதுபோக்கு இடமாக உள்ளது. இதில் உள்ள ரீல்ஸ் வசதியை பயன்படுத்தி பலரும் பாடல்களுக்கு நடனமாடுவது , நடிப்பு திறமையை வெளிப்படுத்துவது என அசத்தி வருகின்றனர். முதலில் பேஸ்புக்கை நிர்வகித்து வந்த மார் பின்னர் இன்ஸ்டாவை வாங்கினார். தற்போது பேஸ்புக் டல்லடிக்கத் தொடங்கிவிட்ட நிலையில் இன்ஸ்டா பக்கம்தான் இளசுகள் குவியத் தொடங்கியுள்ளனர்.
பேஸ்புக் மாதிரி ரைட்டப்களுக்கு வாய்ப்பு இல்லாமல் கலர்புல் போட்டோக்கள், வகைவகையான வீடியோக்கள் என இளைஞர்களை கவரும் விதமாகவே இன்ஸ்டா உள்ளது. குறிப்பாக இந்தியாவில் டிக் டாக் தடைசெய்யப்பட்டபோது அந்த இடத்தைப் பிடிக்க இன்ஸ்டா கடுமையாக உழைத்தது. அப்போதுதான் ரீல்ஸ் அறிமுகப்படுத்தப்பட்டது.
தற்போது ரீல்ஸுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ள நிலையில் அதன்மூலம் பண வருமானம் ஈட்டவும் இன்ஸ்டா வாய்ப்பு கொடுக்கிறது. இதனால் அதிக ரீல்ஸ் அதிக பாலோவர்ஸ் என இன்ஸ்டா பக்க ப்ளான் போட்டுள்ளது. இந்நிலையில் தனக்கு போட்டி நிறுவனங்களையும் உற்று கவனிக்கும் இன்ஸ்டா அதிலுள்ள அம்சங்களையும் இன்ஸ்டாவில் அறிமுகம் செய்ய முயற்சிக்கிறது. அந்த வகையில் தற்போது இன்ஸ்டா கவனத்தை திருப்பியுள்ள செயலிதான் Bereal.
Bereal செயலி..
தற்போது கல்லூரி மாணவர்களிடையேவும் இளைஞர்களிடையேவும் பிரபலமாகி வரும் ஆப் Bereal. நண்பர்களுக்கு நோட்டிபிகேஷன் அனுப்பி வீடியோவை பதிவிடுவது, ஒரே நேரத்தில் நண்பர்கள் அனைவரும் ஒரே ஸ்கிரீனில் வீடியோ பதிவிட்டு ஜாலியாக அரட்டை அடிக்கவும் இந்த செயலியில் ஆப்ஷன் உள்ளது. அதாவது உங்களின் மொத்த நாளையும் ஒரு சின்ன வீடியோவுக்குள் சுருக்கிக்கூட உங்களின் எந்த நண்பர்களுடனும் டச்சில் இருக்கலாம். இது நல்லா இருக்கே என இளைஞர்கள் Bereal பக்கம் திரும்பியதால் அந்த ஆப் பக்கம் தற்போது இன்ஸ்டா திரும்பியுள்ளது. Bereal ஆப்ஷனைப்போலவே வீடியோ ஆப்ஷனை கொண்டுவர இன்ஸ்டா திட்டமிட்டுள்ளது. அதற்கான ஆப்ஷன் விரைவில் IG வீடியோவில் வரும் என தெரிகிறது.
முன்னதாக ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் பயன்படுத்துவதன் மூலம் தனிநபர் விவரங்கள் திருடப்படுவதாக மேலும் ஒரு புதிய தகவல் வெளியானது. இது தொடர்பாக ஃபெலிக்ஸ் க்ராஸ் என்ற முன்னாள் கூகுள் பொறியாளர் ஒருவர் பாதுக்காப்பு குறைபாடு ஒன்றை கண்டறிந்துள்ளார். அதன்படி ஐபோன் பயனாளர்கள் தங்களுடைய ஐபோனில் ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகியவற்றை பயன்படுத்தும் போது அவர்கள் விளம்பரம் அல்லது லிங்க் ஆகியவற்றை தொடும் போது இந்தப் பிரச்னை வரும் என்று குறிப்பிடுகிறார். அதாவது இந்த விளம்பரம் மற்றும் லிங்க் ஆகியவற்றை ஒருவர் தொடும் போது அது சஃபாரி ப்ரோவுசரில் திறக்காது. மாறாக அந்த செயலிகளின் இன் ஆப் ப்ரோவுசரில் திறக்கம். அப்போது வாடிக்கையாளர் அந்த தளத்தில் பதிவிடும் தகவல் அனைத்தையும் ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் சேகரிக்க முடியும் என்று தெரிவித்துள்ளார். இதன்மூலம் அந்த தளத்தில் பயன்படுத்தப்படும் முக்கிய தனி நபர் விவரங்களான வங்கி கணக்கு விவரம், பாஸ்வேர்டு உள்ளிட்ட விஷயங்கள் கசிய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும் இதற்கான காரணத்தையும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.