இன்ஸ்டாகிராம் அவ்வப்போது ஒரு புதிய அப்டேட்டை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது புதிய அப்டேட் ஒன்று அறிமுகமாகியுள்ளது. இது பயனர்கள் தங்கள் இடுகைகளை வெளியிட்ட பிறகு அவர்களின் சுயவிவரத்தில் அது எவ்வாறு தோன்றும் என்பதை தீர்மானிக்க அனுமதிக்கும். இன்ஸ்டாகிராம் பயனர்கள் இப்போது இடுகைகளை முழு இடுகையாகத் தோன்றும்படி அமைக்கலாம் அல்லது செதுக்கி, க்ராப் செய்து, இடுகையின் குறிப்பிட்ட பகுதியை முன்னோட்டமாகத் தெரியும்படி தேர்ந்தெடுக்கலாம்.


தங்கள் சுயவிவரப் பக்கத்தில் தங்கள் இடுகைகள் எப்படி இருக்கும் என்பதைக் கட்டுப்படுத்த விரும்பும் பயனர்களுக்கு இந்த அம்சம் எளிதாக இருக்கும்.குறிப்பாக ஆர்டிஸ்ட்களுக்கு தங்கள் படைப்பை அறிமுகம் செய்ய இது எளிதாக இருக்கும் எனக் கூறப்பட்டுள்ளது.






முன்னதாக, பொழுதுபோக்கிற்காகவும் வருமான நோக்கத்திற்காகவும் திறமையை வெளிப்படுத்துவதற்காகவும் பலராலும் பயன்படுத்தப்படும் சமூக வலைத்தளங்களில் ஒன்றாக இருப்பது இன்ஸ்டாகிராம் . இதில் உள்ள ரீல்ஸ் வசதியை பயன்படுத்தி பலரும் பாடல்களுக்கு நடனமாடுவது , நடிப்பு திறமையை வெளிப்படுத்துவது என அசத்தி வருகின்றனர். இந்த நிலையில் அத்தகைய பயனாளர்களை ஊக்கிவிக்கும் விதமாக விரைவில் இன்ஸ்டாகிராம் புதிய வசதிகளை அறிமுகப்படுத்த இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.பிசினஸ் இன்சைடரின் வெளியிட்டுள்ள தகவலின் படி ,  ரீல்களை உருவாக்குவதை எளிதாக்கும் புதிய டெம்ப்ளேட்களை இன்ஸ்டாகிராம் சோதிக்கிறது. இந்த அம்சம், மற்ற ரீல்களில் பயன்படுத்தப்படும் வடிவங்களை நகலெடுக்கவும் அனுமதிக்கும் என செய்திகள் வெளியாகியுள்ளது. இந்த புதிய அம்சமானது கடந்த ஜனவரி மாதம் டெவலப்பர்ஸ் மற்றும் குறிப்பிட்ட சில பயனாளர்களுக்கு மட்டும் சோதனை முயற்சியாக அறிமுகமாகியுள்ளது. அதனை பயன்படுத்திய மார்க்கெட்டிங்  மேனேஜர் மற்றும்  சமூக வலைத்தளங்களில் செல்வாக்கு மிக்க ஜோசபின் ஹில் சில விஷயங்களை பகிர்ந்துக்கொண்டார். ”அதன்படி நான் தேடும் ஒரு விஷயம், குறிப்பாக இன்ஸ்டாகிராம் ரீல்ஸில், டிக் டாக்கின்  ஆடியோ ஒத்திசைவை  போன்றே உள்ளது” என தெரிவித்துள்ளார்.


இன்ஸ்டாகிராமின் தாய் நிறுவனமான மெட்டாவின் செய்தித் தொடர்பாளர் டெக் க்ரஞ்சிடம் பேசுகையில், "ரீல்களை உருவாக்குவதை எளிதாக்குவதற்கான புதிய வழிகளில் தாங்கள் பணியாற்றி வருகிறோம்" என்றும் ஏற்கனவே இருக்கும் டெம்ப்லேட்டை பயன்படுத்தி எப்படி ஒரு ரீல்ஸை உருவாக்குவது என்பது குறித்து சோதனை செய்து வருகிறோம் என தெரிவித்தார். விரைவில் அறிமுகமாகவுள்ள இந்த வசதி பல ரீல்ஸ் கிரியேட்டர்களை கவரும் என தெரிகிறது. மேலும் அனைத்து பயனாளர்களுக்கும் விரைவில் இந்த வசதி கிடைக்கும் என எதிரார்க்கப்படுகிறது.