உலகெங்கிலும் உள்ள இன்ஸ்டாகிராம் பயனாளர்கள் தங்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தை புதுபிக்க முடியவில்லை என புகார் தெரிவித்துள்ளனர். சில பயனாளர்கள் தங்களது சிக்கலை சரிசெய்ய இன்ஸ்டாகிராம் அப்ளிகேஷனை டெலிட் செய்துவிட்டு மீண்டும் இன்ஸ்டால் செய்தனர். 


ஆயிரக்கணக்கான பயனாளர்கள் தங்களால் முகப்பு பக்கத்தை புதுப்பிக்க முடியவில்லை என்றும் குறுஞ்செய்தி அனுப்ப முடியவில்லை எனவும் புகார் தெரிவிக்கின்றனர். இந்த பிரச்சினை இன்று காலை 7 மணி முதல் தொடங்கியது என டவுண்டிடெக்டர் கண்டறிந்துள்ளது. 


ஒவ்வொரு 30 நிமிடங்களுக்கும் 150 என கிட்டத்தட்ட நான்கு மணிநேரங்களுக்கு டவுண்டிடெக்டரின் வரைபடத்தில் சிவப்பு நிறம் காட்டுகிறது. அது மட்டுமல்லாமல், அமெரிக்கா மற்றும் பிற நாடுகளில் உள்ள இன்ஸ்டாகிராம் பயனர்களும் இதே போன்ற சிக்கல்களை எதிர்கொள்வதாக டவுன்டெக்டர் வரைபடத்தில் காட்டப்பட்டுள்ளது.


77 சதவீத பயனாளர்கள் இந்த பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர். 22 சதவீத பயனாளர்கள் இன்ஸ்டாகிராமிற்குள் நுழைய முடியவில்லை எனவும் 11 சதவீத பயனாளர்கள் எதையும் போஸ்ட் செய்ய முடியவில்லை எனவும் புகார் தெரிவிக்கின்றனர். இந்தியா, அமெரிக்கா மற்றும் சில நாடுகளில் உள்ள பயனர்கள் இன்ஸ்டாகிராமை பயன்படுத்துவதில் சிக்கல்களை எதிர்கொள்கின்றனர்.


பெரும்பாலான நேரங்களில் ஏதேனும் பிரச்சினைகளை கண்டறிவதில் எக்ஸ் தளம் முக்கிய பங்கு வகிக்கிறது. அதன்படி, இதுகுறித்து எக்ஸ் தளத்தில் விவாதித்து வருகின்றனர். மேலும், பேஸ்புக், மெட்டா, இன்ஸ்டாகிராம் CEO மார்க் ஜுக்கர்பெர்க்கை ட்ரோல் செய்யத் தொடங்கியுள்ளனர். இருப்பினும், தற்போது நிலைமை குறித்து இதுவரை எவ்வித பதிலையும் அளிக்கவில்லை.



தொழில்நுட்ப கோளாறு காரணமாக இதுபோன்ற சிக்கல்கள் இருக்கலாம் எனத் தெரியவருகிறது. விரைவில் இப்பிரச்சினை சரிசெய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


எக்ஸ் தளத்தில் பயனாளர்களின்  சில போஸ்ட்டுகள் இங்கே!