இந்தியாவில் அதிகளவில் பயனாளர்களை கொண்ட சமூக வலைதளங்களில் ஒன்று இன்ஸ்டாகிராம். மெட்டா நிறுவனத்தின் மற்றொரு முக்கியமான சமூக வலைதளங்களில் இதுவும் ஒன்று. இந்தத் தளத்தில் படங்கள் பகிர்வது மற்றும் இன்ஸ்டா ரீல்ஸ் போடுவது எனப் பல இளைஞர்கள் இதை பயன்படுத்தி வருகின்றனர். அவர்களை கவரும் வகையில் இன்ஸ்டாகிராம் அவ்வப்போது புதிய அப்டேட்களை செய்து வருகிறது. 


இந்நிலையில் இன்ஸ்டாகிராம் நிறுவனம் தற்போது புதிய வசதி ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. அதன்படி இன்ஸ்டா ரீல்ஸில் இனிமேல் கிரியேட்டர்களுக்கு கிரேடிட் கொடுக்கும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதாவது இன்ஸ்டா ரீல்ஸில் பலரும் ஒரு நபர் போட்ட ஆடியோவை எடுத்து ரீல்ஸாக பதிவு செய்து வருகின்றனர். இருப்பினும் அதை முதலில் பதிவிட்ட நபருக்கு சரியான கிரேடிட் கிடைப்பதில்லை என்ற வருத்தம் இருந்து வந்துள்ளது. இந்தச் சூழலில் இதை சரி செய்யும் வகையில் ரீல்ஸ் வீடியோவில் கிரியேட்டர் டேக் கொண்டு வரப்பட்டுள்ளது. 




அதன்படி இன்ஸ்டா ரீல்ஸை பதிவேற்றம் செய்வதற்கு முன்பாக நீங்கள் கிரியேட்டராக இருந்தால் உங்களுடைய கணக்கின் பெயரை கிரியேட்டர் என்ற டேக்கில் சேர்த்து கொள்ளலாம். அதுவே நீங்கள் வேறு நபர் போட்டிருந்தை எடுத்து பதிவிடும் போது அவருக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும் வகையில் அவருடைய கணக்கை கிரியேட்டர் டேக்கில் சேர்த்து கொள்ளலாம் என்ற புதிய வசதி கொடுக்கப்பட்டுள்ளது. 


இந்தப் புதிய வசதியை பயன்படுத்த வாடிக்கையாளர்கள் செய்ய வேண்டியது: 



  •  இன்ஸ்டாகிராம் செயலியை திறந்து (+) ஐகானை தொட வேண்டும்.

  • புதிய பதிவை உருவாக்கி அடுத்து என்பதை க்ளிக் செய்ய வேண்டும்.

  • பதிவில் எதாவது புதிய மாற்றம் செய்துவிட்டு அடுத்து என்பதை க்ளிக் செய்க

  • இங்கு கிரியேட்டர் கணக்கை டேக் செய்ய வேண்டும். 

  • அதன்பின்னர் உங்களுடைய வீடியோ வேறு ஒருவருடையது என்றால் அவரை இங்கு டேக் செய்ய வேண்டும்.

  • அதன்பின்னர் கிரியேட்டர் டேக்கை காட்டும் வகையில் Show Profile Categoryல் creator category டிஸ்ப்ளே செய்ய வேண்டும். 

  •  இவை அனைத்தையும் முடித்த பிறகு இன்ஸ்டா ரீல்ஸை ஷேர் செய்ய வேண்டும். 


இவ்வாறு இன்ஸ்டாகிராமின் புதிய வசதியை நாம் பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. 




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண