சமூக வலைதளங்களில் எப்போதும் சாகசங்கள் தொடர்பான வீடியோக்கள் வைரலாவது வழக்கம். அந்தவகையில் தற்போது ஒரு வீடியோ ஒன்று வேகமாக வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் நடுவானில் இரு விமானிகள் செய்ய முற்பட்ட சாகசங்கள் தொடர்பான வீடியோ வேகமாக வைரலாகி வருகிறது. அந்தச் செயல் விபரீதத்தில் முடியும் வகையில் அமைந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


இந்தச் சம்பவம் தொடர்பாக ஒருவர் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதன்படி, அமெரிக்காவின் அரிசோனா பகுதியில் இரண்டு ஸ்கை டைவிங் செய்யும் வீரர்கள் ரெட் புல் நிறுவனத்தின் விமான குழுவில் இடம்பெற்றுள்ளனர். அவர்கள் இருவரும் நடுவானில் தங்களுடைய விமானங்களை மாற்றும் சாகசத்தை திட்டமிட்டுள்ளனர். இந்தச் சாகசத்தை செய்ய இருவரும் தங்களுடைய விமானத்தில் இருந்து நடு வானில் மாற முற்பட்டுள்ளனர். 


 






அப்போது ஒரு விமான கட்டுப்பாட்டை இழந்து காற்றில் சுழன்று வேகமாக தரையில் வந்து மோதியுள்ளது. எனினும் அதிர்ஷ்டவசமாக ஸ்கை டைவிங் வீரர் விமானத்தில் இருந்து வெளியே வந்தால் அவருக்கு எந்தவித காயமும் ஏற்படவில்லை. மேலும் அந்த இருவரும் எந்தவித காயமும் இன்று நல்ல முறையில் தரைக்கு வந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 


 






இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ தான் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது. இந்த வீடியோ தொடர்பாக பலரும் தங்களுடைய கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். இந்த ஆபத்தான சாகச செயலில் ஈடுபட்ட ஸ்கை டைவிங் வீரர்களை பலரும் கண்டித்து கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். 




மேலும் படிக்க:அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹாரீஸிற்கு கொரோனா தொற்று உறுதி




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண