உலகளவில் பேஸ்புக் செயலிக்கு பிறகு அதிக பயனர்களை கொண்ட பக்கமாக இன்ஸ்டாகிராம் திகழ்ந்து வருகிறது. அதிலும், குறிப்பாக 2 கே கிட்ஸுக்கு இதுதான் உயிர் மூச்சு என்றால் அது மிகையாகாது. அந்த அளவிற்கு இன்ஸ்டாகிராம் உலகத்தை ஆட்சி செய்து வருகிறது.
இந்தநிலையில், நேற்று இரவு இன்ஸ்டாகிராம் பக்கம் பல பயனர்களுக்கு செயல்படவில்லை என்று புகார் எழுந்தது. பெரும்பாலான பயனர்களுக்கு முகப்பு பக்கம் மற்றும் தங்களது சுயவிவரக்குறிப்பு பக்கம் தெரியவில்லை என்று ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு வந்தனர்.
முன்னதாக, நேற்று இரவு 10:40 மணிக்கு இன்ஸ்டாகிராம் பக்கம் செயலிழக்க தொடங்கியதாகக் கூறப்படுகிறது, அதன் பின்னர், ஒரு மணிநேரத்திற்கு அதிகமான மக்கள் இன்ஸ்டா பக்கம் இயங்கவில்லை என்று புகாரளித்ததாகவும் தெரியவந்துள்ளது. தொடர்ந்து, இரவு 11:30 மணி நிலவரப்படி, டெல்லி, மும்பை, லக்னோ, இந்தூர், ஹைதராபாத், பெங்களூரு, சென்னை மற்றும் பிற முக்கிய நகரங்களிலும் இன்ஸ்டாகிராம் பக்கம் எடுக்கவில்லை என்ற புகாரும் எழுந்துள்ளது.
இதையடுத்து, இன்ஸ்டாகிராம் செயலிழப்பு குறித்து உறுதிப்படுத்தவில்லை மற்றும் அதற்கான சரியான காரணம் என்ன என்றும் பலரும் கல்வி எழுப்பி வருகின்றனர். மேலும், ட்விட்டரில் உள்ள பல பயனர்கள் Instagram இன் அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தலுக்கு முன்பே செயலிழப்பு குறித்து புகாரளிக்க தொடங்கிவிட்டனர்.
ஆனால், பல முக்கிய நகரங்களில் மட்டுமே இன்ஸ்டா பக்கம் எடுக்கவில்லை என்றும், பல ஊர்களில் இன்ஸ்டா பக்கம் செயல்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது. அதேபோல், இன்ஸ்டா ஏன் இயங்காமல் போனது என்ற காரணம் மட்டும் இதுவரை அறியப்படவில்லை.
இன்ஸ்டா பக்கத்திற்கு முன்னதாக கடந்த மார்ச் 18ம் தேதி அன்று இதேபோன்ற Google Maps செயலிழக்க தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது. இன்ஸ்டா இயங்காமல் போனது தொடர்பாக தற்போது பலரும் ட்விட்டர் பக்கத்தில் கமெண்ட் செய்து வருகின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்