பணியிடக் கட்டமைப்பில் ஏற்படும் மாற்றங்களுடன் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதன் மூலம் அனைத்துப் பகுதிகளிலும் உற்பத்தித் திறனை அதிகரிக்க முடியும். இந்த நவீன யுகத்தில் தொழில்துறையில் தொடர்ச்சியாகப் பணியாற்றுபவர்கள் பாலின பேதமின்றி நேரகாலம் இல்லாமல் உழைக்கிறார்கள்.இதற்கிடையே அனைவருமே தங்களது உழைப்பையும் தனிப்பட்ட வாழ்க்கையையும் எப்படி பேலன்ஸ் செய்வது என்பதில் தவறவிட்டு விடுகின்றனர். 


உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையை பாதிக்காத வகையில் வேலைக்கான சரியான கேட்ஜட்களை வைத்திருப்பது இதில் மிகமிக முக்கியம். 


வேலைக்கும் வாழ்க்கைக்கும் இடையில் சமநிலையை ஏற்படுத்துவது மிகவும் அவசியம்.


உங்கள் மடிக்கணினியின் வெப்பம் உங்கள் சருமத்தை பாதிக்கிறது என்று கவலைப்படுகிறீர்களா?
பலர் தங்கள் மடிக்கணினிகள் மிகவும் சூடாகவும், தோல் பாதிப்பை ஏற்படுத்துவதாகவும் கவலைப்படுகிறார்கள். கூலிங் பேடைப் பயன்படுத்துவதன் மூலம் இதைப் போக்கலாம். ஒரு லேப்டாப் கூலிங் பேட் உபயோகிப்பது உங்கள் லேப்டாப்பைக் குளிர்விக்கிறது. இதன் மூலம் அதன் அடிப்பகுதியில் இருந்து காற்றை மேலே எழுப்பி அதன் வழியாக லேப்டாப் அதிக வெப்பமடைவதையும், அதிக சூடாக இயங்குவதையும் தடுக்கிறது, 


வேலையிலும் உங்கள் குடும்ப வாழ்க்கையிலும் வெற்றிபெற சிறந்த வழியைத் தேடுகிறீர்களா?
உங்கள் வேலை மற்றும் குடும்ப வாழ்க்கையை சமநிலைப்படுத்த விரும்புபவர்கள் வெப்கேமராவைப் பயன்படுத்துவதன் மூலம் பெரிதும் பயனடையலாம். உதாரணத்துக்கு நீங்கள் வேலையில் இருக்கும்போது உங்கள் குழந்தைகளைத் தெளிவாகப் பார்க்க இது அனுமதிக்கிறது. இது தொடர்ச்சியான இணைப்பையும் வழங்குகிறது, இது அவர்களின் குழந்தைகளின் அல்லது குடும்பத்தின் தேவைகளுக்கு விரைவில் பதிலளிக்க அனுமதிக்கிறது.மற்றொருபக்கம் வீட்டில் இருந்தபடியே அலுவலக மீட்டிங்களை அட்டெண்ட் செய்வது போன்றவற்றையும் நம்மால் செய்ய முடியும். இதனால் குடும்பத்துடன் அதிக நேரத்தைச் செலவிட முடியும். உலகில் எங்கிருந்தும் எந்த நேரத்திலும் வேலை செய்ய வெப்கேம் உங்களுக்கு உதவுகிறது.


வயர்லெஸ் இயர்போன்கள் இனி இசையைக் கேட்பதற்கு மட்டுமல்ல அவை நம் வாழ்வின் இன்றியமையாத அங்கமாகிவிட்டன. மேலும்,  அவை உங்கள் தொலைபேசிகளை உங்களுடனேயே வைத்திருக்க வேண்டும் என்கிற அவசியம் இல்லாமல் இன்ன பலவற்றைச் செய்ய உதவுகின்றன. வயர்லெஸ் இயர்போன்கள் அலுவலக ஊழியர்களுக்கு ஒரு வரப்பிரசாதம். பயணத்தின்போது அவர்கள் காதில் இந்த வயர்லெஸ்களை மாட்டியபடியே பல்வேறு பணிகளைச் செய்யலாம் மேலும் தொலைபேசி அழைப்புகள் அல்லது வீட்டு வேலைகளையும் நிர்வகிக்கலாம்.


எந்த நேரத்திலும் எந்த இடத்தில் தடையின்றி வேலை செய்ய ரூட்டர் சேவைக்கான யுபிஎஸ் வைத்திருப்பது அவசியல்.அவை எல்லா நேரங்களிலும் தொடர்ந்து வேலை செய்ய வேண்டிய நபர்களுக்கு ஏற்றது. இந்தச் சேவையின் மூலம் உங்களுக்கான வேலை நேரத்தை நீங்களே அமைத்துக் கொள்ளலாம் மற்றும் நேரத்தைச் செலவழித்து அலுவலகம் வரவேண்டியதைத் தவிர்க்கலாம்.