நம்முடைய வாழ்க்கை மாற்றத்திற்கு ஏற்பதான் தொழில்நுட்ப  வளர்ச்சியிலும் மாறுபாட்டினை காணமுடிகிறது. பெருந்தொற்று , மாசு , சுற்றுச்சூழல் பாதிப்பு என்றாகிவிட்ட காலக்கட்டத்தில் அதற்கேற்ற மாதிரியான தொழில்நுட்ப கவசங்கள் சந்தைப்படுத்தப்படுகின்றன. அப்படித்தான் ஐஐடி-டெல்லி ஸ்டார்ட்-அப் நானோக்லீன் குளோபல்  உலகின் மிகச்சிறிய அணியக்கூடிய காற்று சுத்திகரிப்பானை அறிமுகப்படுத்தியுள்ளனர். இதற்கு  Naso95  என பெயர் வைத்துள்ளனர்.  பார்ப்பதற்கு சிறிய பட்ஸ் போல இருக்கும் இதனை மூக்கு துவாரங்களில் ஒட்டிக்கொண்டால் போதுமானது. Naso95 ஆனது N95 தர முகமூடிக்கு இணையான செயல்திறன் கொண்டது என்கின்றனர் இதனை உருவாக்கியவர்கள். மேலும் Naso95 என்பது N95 தர நாசி வடிகட்டியா உருவாக்கப்பட்டிருப்பதால் இது பயனரின் நாசி துவாரத்தில் ஒட்டிக்கொண்டிருக்கும் பாக்டீரியா, வைரஸ் தொற்று, மகரந்தம் மற்றும் மாசு கலந்த காற்றினை சுவாசிப்பதை தடுக்கும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.







"Naso95”  ஆனது நாம் பயன்படுத்தும் சாதாரண மாஸ்க் மற்றும் தளர்வாக  அணியக்கூடிய மாஸ்கை விடவும் மிகவும் பாதுகாப்பானது என கூறப்படுகிறது. இதனை 5 வயது குழந்தைகள் கூட அணியலாம். அந்த அளவிற்கு வெவ்வேறு விதங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் தயாரிப்பு மற்றும் பாதுகாப்பு தரத்தினை உறுதி செய்வதற்காக அனுப்பப்பட்ட  சோதனையில் , தேசிய மற்றும் சர்வதேச ஆய்வகங்களால்  
"Naso95” ஆய்விற்கு உட்படுத்தப்பட்டு சான்றளிக்கப்பட்டதாக இந்நிறுவனம் தெரிவித்துள்ளது. வைரஸ்களை விட காற்று மாசுபாடு மிகப் பெரிய பிரச்சனையாகும். அது புற்றுநோயை உருவாக்கும் ஆரம்ப காரணிகளாகவும் இருக்கின்றன. இதற்கு தீர்வாகத்தான் "Naso95”   களமிறங்கியுள்ளது. இதனை  மெட்ரோ நகரங்களில் பயன்படுத்தினால் , சுவாச நோய்களின் பிரச்சனையை திறம்பட சமாளிக்க முடியும் என டாக்டர் எம்.சி. மிஸ்ரா (முன்னாள் இயக்குனர், டெல்லி, எய்ம்ஸ்) தெரிவித்துள்ளார்.







இந்த ஆண்டின் தொடக்கத்தில், யேல் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் புதிய காற்று கிளிப் என அழைக்கப்படும் அணியக்கூடிய செயலற்ற காற்று மாதிரியை உருவாக்கினர், இது பாலிடிமெதில்சிலோக்சேன் (PDMS) மேற்பரப்பில் வைரஸ் நிறைந்த ஏரோசோல்களைத் உறிஞ்சும் என்பது குறிப்பிடத்தக்கது.