UPI ATM Cash Withdrawal: யுபிஐ வசதியைப் பயன்படுத்தி ஏடிஎமில் பணம் எடுக்கும் வசதியை அறிமுகம் செய்துள்ளது நேஷனல் பேமென்ட்ஸ் கார்ப்பரேஷன்.


யுபிஐ பரிவர்த்தனை:


பல வங்கி கணக்குகளையும் ஒரே மொபைல் செயலி மூலம் எளிதாக கையாளக்கூடிய வசதிதான் UPI (Unified Payments Interface). கடந்த 2016-ஆம் ஆண்டு என்.சி.பி.ஐ. 21 வங்கிகளுடன் UPI முறையைத் தொடங்கியது. தற்போது அசுர வளர்ச்சி அடைந்து, Gpay, Paytm, PhonePe போன்ற பல்வேறு செயலிகள் மூலம், டீக்கடை தொடங்கி நகைக்கடை வரையிலும் யுபிஐ பயன்பாடு அதிகரித்துள்ளது.


பயனாளர்களின் வசதிகளை மேற்படுத்துவதற்காக யு.பி.ஐ தொழில்நுட்பத்தில் பல்வேறு மாற்றங்கள், மேம்பாடுகள் ஆகியவற்றிற்காக மத்திய அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளது.  டிஜிட்டல் பரிவர்த்தனையை அடுத்தக்கட்டத்திற்கு எடுத்துச் செல்லவும் பயனாளர்களுக்கு மேம்படுத்தப்பட்ட அனுபவத்தை வழங்கவும் பல்வேறு புதிய வசதிகள் அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது.


புதிய வசதி:


அந்த வரிசையில், தற்போது யுபிஐ நம்பரை பயன்படுத்தி ஏடிஎமில் பணம் எடுக்கும் வசதியை அறிமுகம் செய்துள்ளது நேஷனல் பேமென்ட்ஸ் கார்ப்பரேஷன். முன்பு எல்லாம் ஏடிஎம் கார்ட்டை பயன்படுத்தி பணம் எடுத்து வந்த நிலையில், தற்போது ஏடிஎம் கார்டு இல்லாமல்  யுபிஐ மூலம் பணம் எடுக்கும் வசதி அறிமுகப்படுத்துப்பட்டுள்ளது.  இந்த வசதி கொண்ட ஏடிஏம் மெஷின் மும்பையில் நடைபெற்ற Global Fintech Fest விழாவில் சோதனை முறையில் வைக்கப்பட்டுள்ளது. 


இப்போதைக்கு இது BHIM செயலியில் மட்டுமே இயக்குகிறது. வரும் நாட்களில் அனைத்து யுபிஐ செயலியிலும் இந்த வசதி பயன்படுத்த முடியும் என்று கூறப்படுகிறது. யுபிஐ ஏடிஎம் சேவை படிப்படியாக பல்வேறு கட்டங்களாக நாடு முழுவதும் மக்கள் பயன்பாட்டிற்கு அறிமுகமாகும் என்று தெரிகிறது. இதை ஃபின்டெக் இன்ஃப்ளூயன்சர் ஒருவர் யுபிஐ ஏடிஎம்-ல் பணம் எடுக்கும் வீடியோவை மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், எக்ஸ் (ட்விட்டர்) தளத்தில் பகிர்ந்துள்ளார். 






எப்படி யுபிஐ ஏடிஎம்-ல் பணம் எடுப்பது?



  • முதலில் யுபிஐ ஏடிஎம்-ல் 'UPI Cardless Cash' என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். 

  • தொடர்ந்து, திரையில், ரூ.100, ரூ.500, ரூ,1000, ரூ.5000 என காட்டப்படும். அதில் தங்களுக்கு எவ்வளவு பணம் வேண்டும் என்பதை கிளிக் செய்ய வேண்டும். 

  • பின்பு, திரையில் தோன்றும் க்யூஆர் கோர்டை யுபிஐ செயலி மூலம் ஸ்கேன் செய்ய வேண்டும். 

  • அதன்பிறகு, யுபிஐ குறியீட்டு எண்ணை உள்ளிட வேண்டும். 

  • யுபிஐ பின் உறுதி செய்யப்பட்டவுடன், ஏடிஎம் இயந்திரத்தில் இருந்து பயனர்கள் பணம் பெற முடியும்.