வாட்சாப் நிறுவனம் சமீபத்தில் end to end encryption என்ற அம்சத்தை கூகுள் டிரைவ், iCloud ஆகிய தளங்களுக்கு பதிவேற்றம் செய்யப்படும் backup டேட்டாவுக்கும் பொருந்து என அறிவித்துள்ளது. மேலும், வாட்சாப் டேட்டாவை backup செய்து, புதிய ஸ்மார்ட்ஃபோனுக்கு முழுவதுமாக ஆப்லைன் முறைகளின் வழியாகவும் பரிமாற்றம் செய்ய முடியும். இதற்காக RAR என்ற ஃபைல் வடிவத்தின் மூலம் இதனைச் செய்ய முடியும். 


உங்கள் ஃபைல்களை backup செய்த டேட்டாவை ஒரே ஃபோல்டரில் பதிவேற்றி, அதனைப் புதிய ஸ்மார்ட்ஃபோனுக்கு பரிமாற்றம் செய்து பயன்படுத்திக் கொள்ளலாம். புதிய ஸ்மார்ட்ஃபோன் வாங்கிய பிறகு, உங்களிடம் வைஃபை இல்லையெனில், முழுவதுமாக வாட்சாப் டேட்டாவைப் பதிவேற்றம் செய்து, பிறகு பதிவிறக்கம் செய்வது அதிக டேட்டாவை இழுப்பதாக இருக்கிறது. அதனைப் பின்வரும் வழிமுறைகளைப் பின்பற்றி, ஆப்லைன் முறைகளில் பரிமாற்றம் செய்யலாம். 


1. வாட்சாப் செயலில் backup செய்யவும்


வாட்சாப் செயலில், மேல்பக்கத்தின் வலதுபுறத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் மூன்று புள்ளிகள் செட்டிங்ஸ் பகுதிக்கு அழைத்துச் செல்லும். அதில் `chat' பகுதியில், `Chat backup' என்ற பகுதியின் கீழ், `Back up' என்ற ஆப்ஷனைத் தேர்ந்தெடுக்கவும். உங்கள் backup உருவான பிறகு, கூகுள் டிரைவ் தளத்தில் அப்லோட் செய்யவும் என்ற கோரிக்கையை நிராகரிக்கலாம். தற்போது உங்கள் ஸ்மார்ட்ஃபோனின் மெமரியில் புதிய backup ஃபைல்கள் பதிவிறக்கம் செய்யப்பட்டிருக்கும். இதன்பிறகு, உங்கள் பழைய ஸ்மார்ட்ஃபோனில் இருந்து வாட்சாப் செயலியை uninstall செய்யவும்.



2. RAR அல்லது பிற compression செயலிகளைப் பதிவிறக்கி, இன்ஸ்டால் செய்யவும்


கூகுள் ப்ளே ஸ்டோருக்குச் சென்று, RAR செயலியைப் பதிவிறக்கம் செய்து, இன்ஸ்டால் செய்யவும். இதனைப் பயன்படுத்தி, நமது மொத்த வாட்சாப் டேட்டாவையும் ஒரே ஃபைலாக மாற்றிக் கொள்ள முடியும். 


3. வாட்சாப் டேட்டாவை கம்ப்ரெஸ் செய்யவும்


RAR செயலியைப் பயன்படுத்தி, உங்கள் ஸ்மார்ட்ஃபோனில் இண்டெர்னல் ஸ்டோரேஜில் இருக்கும் `.com.whatsapp’ என்ற ஃபோல்டரை முழுவதுமாக .rar என்ற வடிவத்தில் மாற்ற வேண்டும். இந்த வழிமுறை நீண்ட நேரம் எடுத்துக் கொள்ளும் என்பதை நினைவில் கொள்ளவும். .rar வடிவம் மட்டுமின்றி, .zip வடிவங்களுக்கு வாட்சாப் ஃபைல்களைக் கம்ப்ரெஸ் செய்து கொள்ளலாம். 



4. உங்கள் டேட்டாவைப் புதிய ஸ்மார்ட்ஃபோனுக்கு மாற்றம் செய்யவும்


உங்கள் பழைய ஃபோனில் இருந்து கம்ப்ரெஸ் செய்யப்பட்ட  com.whatsapp.rar ஃபைலை உங்கள் புதிய ஃபோனுக்குப் பரிமாற்றம் செய்யவும். இந்த ஃபைலைப் பெரிதாக மாற்றுவதற்கு, Internal Storage/ Android/ Media என்ற வரிசையில் ஃபைல் மேனஜரில் சென்று, com.whatsapp என்ற புதிய ஃபோல்டரை உருவாக்கி, அதில் paste செய்யவும். 


5. உங்கள் புதிய ஸ்மார்ட்ஃபோனில் வாட்சாப் செயலியை இன்ஸ்டால் செய்யவும்


உங்கள் புதிய ஃபோனில் வாட்சாப் செயலியை இன்ஸ்டால் செய்து, தொடக்கத்தில் காட்டும் Google Drive backup prompt பெட்டியை நிராகரிக்கவும். உங்கள் புதிய ஃபோனில் வாட்சாப் டேட்டாவை உங்கள் ஃபோன் தேடி, நீங்கள் சரியான இடத்தில் paste செய்யப்பட்டிருந்தால், உங்கள் வாட்சாப் கணக்குப் பழைய ஸ்மார்ட்ஃபோனில் இருந்தது போலவே உங்கள் புதிய ஸ்மார்ட்ஃபோனிலும் இருக்கும். இப்போது உங்கள் புதிய ஸ்மார்ட்ஃபோனில் நீங்கள் copy செய்த .rar அல்லது .zip ஃபைலை அழித்துக் கொள்ளலாம்.